Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை கால்பந்து: பலம் வாய்ந்த அர்ஜெண்டினாவை வீழித்திய குரேஷியா

Webdunia
வெள்ளி, 22 ஜூன் 2018 (08:40 IST)
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற பலம் வாய்ந்த அர்ஜெண்டினா அணியை குரேஷியா அணி 3-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது கால்பந்து ரசிகர்களை ஆச்சரியம் அடைய செய்துள்ளது.
 
ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை போட்டி தொடரின் நேற்றைய போட்டியில் டி பிரிவில் இடம் பெற்றுள்ள அர்ஜெண்டினா மற்றும் குரேஷியா அணிகள் மோதின. இரு அணி வீர்ர்களும் தடுப்பாட்டத்தை மேற்கொண்டதால் முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் 0-0 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் இருந்தன
 
இந்த நிலையில் ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் குரேஷியா வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அந்த அணியின் வீரர்கள் அடுத்தடுதது 53வது நிமிடத்திலும், 80வது நிமிடத்திலும் இரண்டு  கோல் அடித்து அர்ஜெண்டினா அணியினர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தனர். இந்த நிலையில் 90வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்து 3-0 என்ற கோல்கணக்கில் அபார வெற்றி பெற்றது குரேஷியா. இந்த வெற்றியின் மூலம் தான் ஆடிய இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ள குரேஷியா 6 புள்ளிகளுடன் டி பிரிவில் முதலிடத்தில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்மிருதி மந்தனா அபார பேட்டிங்.. 211 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகள் மகளிர் அணி தோல்வி..!

களத்தில் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்.. கோலி குறித்து சஞ்சய் பாங்கர் கருத்து!

பயிற்சியின் போது இடது காலில் காயமான ரோஹித் ஷர்மா… வைரலான புகைப்படம்!

பயிற்சியின் போது காயமடைந்த முன்னணி வீரர்… இந்திய அணிக்குப் பின்னடைவு!

ஜாகீர் கானை பாக்குற மாதிரியே இருக்கு! சிறுமி பந்து வீசும் வீடியோவை ஷேர் செய்த சச்சின் டெண்டுல்கர்!

அடுத்த கட்டுரையில்
Show comments