நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் மூன்று ஆட்டங்கள் நடைபெற்றது.  ஒரு ஆட்டத்தில் போர்ச்சுக்கல் அணி வெற்றி பெற்றது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் மற்ற இரண்டு ஆட்டங்களில் ஸ்பெயின் மற்றும் உருகுவே அணிகள் வெற்றி பெற்றுள்ளது.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	ஸ்பெயின் அணி நேற்று ஈரான் அணியுடன் மோதியது. இரு அணிகளும் சமபலமாக இருந்ததால் ஆட்டத்தின் முதல் பாதியில் எந்த அணியும் கோல் போடவில்லை. இதனால் 0-0 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலை வகித்தன
 
									
										
			        							
								
																	
	 
	இந்த நிலையில் ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் 54வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் டிகோ அபாரமாக ஒரு கோல் போட்டார். அதன் பின்னர் எந்த அணியும் கோல் போடாததால் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல்கணக்கில் உருகுவே அணியை வென்றது.
 
									
											
							                     
							
							
			        							
								
																	
									
										
										
								
																	அதேபோல் உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகளுக்கு இடையிலான மற்றொரு போட்டியில் உருகுவே அணி 1-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வென்றது.