Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியை நாய் என்று விமர்சித்த காங்கிரஸ் பிரமுகர் – தீபாவளி வீடியோவால் உருவான சர்ச்சை!

Webdunia
திங்கள், 16 நவம்பர் 2020 (10:24 IST)
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தீபாவளிக்காக வெளியிட்ட வீடியோவில் பட்டாசுகளை வெடிக்காதீர்கள் எனக் கூறியதை அடுத்து அவர் மேல் விமர்சனம் எழுந்துள்ளது.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ளார். இந்நிலையில் தனது ரசிகர்களுக்காக அவர் வெளியிட்ட வீடியோவில் ’தீபாவளி பண்டிகையை ஒட்டி யாரும் பட்டாசு வெடிக்காதீர்கள். சுற்றுசூழலைக் காக்கும் விதமாக தீபங்களை ஏற்றியும் இனிப்புகளை பரிமாறியும் கொண்டாடுங்கள்’ எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் அவரின் வீடியோ பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் எல்லா போட்டிகளிலும் பட்டாசுகள் அதிகமாக வெடிக்கப்பட்டன. அதுமட்டுமில்லாமல் கோலி தனது பிறந்தநாளை துபாயில் கொண்டாடிய போது பட்டாசு வெடித்துதான் கொண்டாடினார். அப்படி இருக்கையில் அவர் எப்படி மக்களிடம் பட்டாசு வெடிக்க வேண்டாம் என சொல்லலாம் என விமர்சனம் எழுந்தது.  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் அக்கட்சியின் செய்தித்தொடர்பாளருமான் உதித் ராஜ் இதுகுறித்து பேசும் போது விராட் கோலியை நாய் என விமர்சனம் செய்துள்ளார். இது இப்போது பரபரப்பை உருவாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

ஆர்சிபி கனவுக்கு ஆப்பு வைக்குமா மழை? மஞ்சள் படையை எதிர்கொள்ளும் நாளில் ஆரஞ்சு அலெர்ட்!

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments