Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாரடோனா மரணத்தில் மர்மம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Advertiesment
மாரடோனா மரணத்தில் மர்மம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
, செவ்வாய், 1 டிசம்பர் 2020 (10:03 IST)
கால்பந்து ஜாம்பவான் டியாகோ மாரடோனாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

மாரடோனா மறைவு அவரது உலகம் முழுவதும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மூளை அறுவை சிகிச்சைக்காக அர்ஜென்டினா தலைநகரில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றார். சிகிச்சை முடிந்து குணமாகி அவர் வீடு திரும்பிய நிலையில் திடீரென சமீபத்தில் அவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக சொல்லி வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர். அதன் முதல் கட்டமாக மாரடோனாவின் தனி மருத்துவரின் வீடுகளில் சோதனை மற்றும் அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ஆட்டத்துல அவங்க இல்ல; ஒயிட்வாஷ் ஆகாம ஜெயிக்கணும்! – இந்தியாவுக்கு கடைசி வாய்ப்பு!