சமீபத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை டி20 போட்டியில் இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்த பும்ரா இன்று நடைபெறும் இந்தியா இலங்கை அணிகளுக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடுவார் என்று தகவல்கள் வெளியாகின.
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் நிலையில் இன்று முதலாவது டி20 போட்டி 7 மணிக்கு தொடங்க உள்ளது.
இந்த போட்டியில் இந்தியாவின் மூத்த வீரர்களான ரோகித் சர்மா, விராத் கோலி, கேஎல் ராகுல் ஆகியோர் இடம்பெறவில்லை
இந்த நிலையில் கடந்த சில போட்டிகளில் விளையாடாமல் இருந்த பும்ரா இன்று இந்திய அணியில் இடம் பெறுகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து இன்று பும்ராவின் வேக பந்தில் இலங்கை விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.