Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏலத்துக்கு வந்திருக்கலாமோ… பூம்ராவின் டிவீட் கிளப்பிய சர்ச்சை!

ஏலத்துக்கு வந்திருக்கலாமோ… பூம்ராவின் டிவீட் கிளப்பிய சர்ச்சை!
, திங்கள், 14 பிப்ரவரி 2022 (10:07 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பூம்ரா ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார்.

ஐபிஎல் தொடரின் மூலம் மும்பை அணியால் கண்டெடுக்கப்பட்ட ஜஸ்ப்ரீத் பூம்ரா இந்திய அணிக்குள் நுழைந்து இன்று உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக விளங்குகிறார். இந்த ஆண்டு மெகா ஏலம் நடக்க உள்ளதை அடுத்து ஒவ்வொரு அணியும் நான்கு வீரர்களை மட்டும் வைத்துக்கொண்டு மற்ற வீரர்களை ஏலத்தில் விட்டது.

மும்பை அணியில் பூம்ராவை 12 கோடி ரூபாய்க்கு தக்கவைத்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஏலம் நடந்தபோது பூம்ரா டிவிட்டரில் ‘சிரிப்பது போலவும் தலையில் அடித்துக் கொள்வது போலவும்’ எமோஜிகளோடு ஒரு டிவீட்டைப் பகிர்ந்திருந்தார். அதற்கு என்ன அர்த்தம் என ரசிகர்கள் குழம்ப, ஒரு சிலர் ‘ஏலத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நல்ல டிமாண்ட் உள்ளதால் தானும் ஏலத்துக்கு வந்திருந்தால் நல்ல தொகையைப் பெற்றிருக்கலாம்’ என நினைத்து பூம்ரா டிவீட் செய்துள்ளதாக பதிவிட்டனர். வேகப்பந்து வீச்சாளர்களில் தீபக் சஹார் அதிகமாக 14 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2022 ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா இல்லை: அதிகாரபூர்வ அறிவிப்பு