Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரேசில் கோல் மழை; பணிந்தது ஹைட்டி அணி

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2016 (11:03 IST)
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் பிரேசில் அணி 7-1 என்ற கணக்கில் ஹைட்டி அணியை வெற்றி பெற்றது.
 

 
அமெரிக்காவில், 45வது கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் ‘பி’ பிரிவு லீக் போட்டியில் பிரேசில் அணி ஹைட்டி அணியை சந்தித்தது. துவக்கம் முதலே பிரேசில் வீரர்கள் அலை அலையாக தாக்குதல் தொடுத்தனர்.
 
போட்டியின் 14, 29ஆவது நிமிடத்தில் பிலிப் கௌடின்ஹோ தலா ஒருகோல் அடித்து அசத்தினார். தன் பங்கிற்கு அகஸ்டோ 35வது நிமிடம் கோல் அடித்து பிரேசில் அணியை வலுப்படுத்தினார்.
 
இரண்டாவது பாதியிலும் ஆதிக்கத்தை தொடர்ந்த பிரேசில் அணிக்கு கேப்ரியல் (59), லூகாஸ் (67), அகஸ்டோ (86) கோல் அடித்து மிரட்டினர். இவர்களின் அதிரடி தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் எதிரணி வீரர்கள் திணறினர்.
 
போட்டியின் கூடுதல் நேரத்தில் (90+2) அசத்திய பிரேசில் வீரர் கவுடின்கோ ‘ஹாட்ரிக்’ கோலை பதிவு செய்தார். ஹைட்டி அணி சார்பில் மார்சிலின் மட்டும் (70) கோல் அடித்தார்.
 
முடிவில், பிரேசில் அணி 7-1 என வெற்றி பெற்றது. அரிசோனாவில் ஈக்வடார், பெரு அணிகள் மோதிய மற்றொரு ‘பி’ பிரிவு லீக் போட்டி 2-2 என ‘டிரா’ ஆனது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

140 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி.. சொந்த மண்ணில் தோல்வியடைந்த நியூசிலாந்து..!

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்.. இந்திய மகளிர் அணி அபார வெற்றி..!

புற்றுநோயை வென்றவர் யுவ்ராஜ் சிங்… ஆனால் அவரை உடல்தகுதியைக் காரணம் காட்டி நீக்கினார்கள்.. கோலியை குற்றம்சாட்டும் உத்தப்பா!

இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளாரா தோனி?

நான் இந்திய அணிக்குக் கேப்டன் ஆகாததற்கு இதுதான் காரணம்.. அஸ்வின் ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments