Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தடுத்து விழுந்த 2 விக்கெட்டுக்கள்: ரஹானே, விஹாரி பொறுப்பான ஆட்டம்!

Webdunia
ஞாயிறு, 27 டிசம்பர் 2020 (07:42 IST)
அடுத்தடுத்து விழுந்த 2 விக்கெட்டுக்கள்:
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சற்று முன் வரை 3 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நேற்று ஒரு விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடங்கியதில் கில் மற்றும் புஜாரா நிதானமாக ஆடி வந்த நிலையில் கில் 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் அவுட்டானார். அதேபோல் புஜாரா 70 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து நிதானமான ஆட்டத்தை கொடுத்து வந்த போது அதே கம்மின்ஸ் பந்தில் அவுட்டானார் 
 
இதனை அடுத்து தற்போது கேப்டன் ரஹானே மற்றும் விஹாரி ஆகிய இருவரும் பொறுப்புடன் மிகவும் நிதானமாக விளையாடி வருகின்றனர். முதல் டெஸ்டில் அவசரப்பட்டு அனைத்து விக்கெட்டுக்களையும் 36 ரன்களுக்கு விழுந்த நிலையில் அப்படி ஒரு நிலை இரண்டாவது டெஸ்டில் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக மிகவும் நிதானமாக இந்திய அணி வீரர்கள் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
ரஹானே தற்போது 10 ரன்களுடனும் விஹாரி 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி சற்று முன் வரை முதல் இன்னிங்சில் 105 ரன்கள் பின்தங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியா விளையாடும் போட்டிகளுக்கான மைதானம் இதுதான்!

ஸ்மிருதி மந்தனா அபார பேட்டிங்.. 211 ரன்கள் வித்தியாசத்தில் மே.இ.தீவுகள் மகளிர் அணி தோல்வி..!

களத்தில் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்.. கோலி குறித்து சஞ்சய் பாங்கர் கருத்து!

பயிற்சியின் போது இடது காலில் காயமான ரோஹித் ஷர்மா… வைரலான புகைப்படம்!

பயிற்சியின் போது காயமடைந்த முன்னணி வீரர்… இந்திய அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments