Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை கால்பந்து: பிரேசில் அதிர்ச்சி தோல்வி, அரையிறுதியில் பெல்ஜியம்

Webdunia
சனி, 7 ஜூலை 2018 (06:56 IST)
உலகக்கோப்பையை வெல்லும் என்று கணிக்கப்பட்ட பிரேசில் அணி நேற்றை காலிறுதி போட்டியில் பெல்ஜியம் அணியிடம் தோல்வி அடைந்து பரிதாபமாக வெளியேறியது.
 
நேற்று நடந்த காலிறுதி போட்டியில் பெல்ஜியம், பிரேசியல் அணிகள் மோதின. ஆரம்பத்தில் இருந்தே ஆட்டம் பெல்ஜியம் பக்கமே இருந்தது. அந்த அணியின் வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடினர்.
 
ஆட்டம் தொடங்கிய 13வது நிமிடத்திலேயே  பெல்ஜியம் வீரர் பெர்னாண்டோ லூயிஸ் ரோசா அபாரமாக ஒரு கோல் போட்டார். பின்னர் 31வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் கெவின் டி புருய்னே ஒரு கோல் அடித்ததால் அந்த அணி 2-0 என்ற கோல்கணக்கில் முன்னிலை வகித்தது. முதல் பாதியில் பிரேசில் வீரர்களால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.
 
இருப்பினும் ஆட்டத்தின் 76-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் ரெனாடோ அகஸ்டோ கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ஒரு கோல் அடித்தார். ஆனால் அதன் பின்னர் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால் பெல்ஜியம் அணி 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு நுழைந்தது. 
 
காலிறுதியில் வெற்றி பெற்ற பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகள் வரும் 10ஆம் தேதி அரையிறுதியில் மோதும். மேலும் இன்று ரஷ்யா மற்றும் குரோஷியா அணிகளும், ஸ்வீடன் மற்றும் இங்கிலாந்து அணிகளும் காலிறுதியில் மோதவுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இப்பவும் கான்வே இல்ல.. டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு! - ப்ளேயிங் 11 நிலவரம்!

18 ஓவர்ல உங்கள முடிச்சோம்.. 16 ஓவர்ல மேட்ச்சையே முடிச்சிட்டோம்! - அதிரடியாக வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ்!

சன்ரைசர்ஸை அடித்து துவைத்த ஸ்டார்க்! - பேட்டிங்கிலும் அசத்தும் டெல்லி!

கடப்பாரை லைன் அப்னா பயந்துடுவோமா? விக்கெட்டை கொத்தாய் பிடுங்கிய ஸ்டார்க் - அதிர்ச்சியில் சன்ரைசர்ஸ்!

களம்னு வந்துட்டா நண்பன்னு பாக்க மாட்டேன்! - ஹர்திக்கை முறைத்துக் கொண்டது பற்றி சாய் கிஷோர்!

அடுத்த கட்டுரையில்
Show comments