இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இனி மாட்டிறைச்சி மற்றும் பன்றி கறி ஆகியவற்றை உண்ண கூடாது என பிசிசிஐ உணவு கட்டுப்பாடு விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
இந்திய கிரிக்கெட் அணி அடுத்தடுத்து வரவுள்ள ஐசிசி தொடர்களில் சிறப்பாக விளையாட இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு புதிய உணவு கட்டுப்பாடுகளை பிசிசிஐ விதித்துள்ளதாக இணையத்தில் செய்திகள் வெளியானது. அதன்படி, இனி இந்திய அணி வீரர்கள் மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி ஆகியவற்றை சாப்பிட கூடாது என அறிவித்ததாக சொல்லப்பட்டது.
அதற்கு பதிலாக ஹலால் செய்யப்பட்ட இறைச்சிகளை மட்டுமே உண்ண வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. முக்கிய நிகழ்வுகளுக்கு வீரர்கள் தேவையற்ற எடையை அதிகரிக்காமல் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்ய பிசிசிஐ கடுமையான உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக சொல்லப்பட்டது. இது சம்மந்தமாக பிசிசிஐக்குக் கண்டனம் இணையம் வாயிலாக எழுந்தது. ஆனால் இப்போது பிசிசிஐ வீரர்களுக்கு உணவுக் கட்டுப்பாடு எதையும் விதிக்கவில்லை என கூறியுள்ளது. வீரர்கள் தங்கள் விருப்பப்படி சைவ உணவோ அல்லது அசைவ உணவோ சாப்பிட பிசிசிஐ எப்போதும் தடை விதித்ததில்லை என பிசிசிஐ தரப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.