Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையை வீழ்த்தி புதிய சாதனை படைத்த வங்காளதேச அணி

Webdunia
ஞாயிறு, 16 செப்டம்பர் 2018 (15:50 IST)
ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியில் இலங்கையை அணியை வீழ்த்தி வங்காள தேச அணி புதிய சாதனை படைத்துள்ளது.

 
6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை 2018 தொடர் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் இலங்கை - வங்காள தேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதல் பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது. 
 
இலங்கை அணிக்கு வெகு நாட்கள் கழித்து திரும்பிய மலிங்கா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இருந்தும் வங்காளதேச அணி 261 ரன்கள் குவித்து அசத்தியது. இதைத்தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 124 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் வங்காளதேச அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
இந்த வெற்றி வங்காளதேச அணிக்கு புதிய சாதனையாக அமைந்தது. வெளிநாடுகளில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

”ஒவ்வொரு நொடியும் பயந்துகிட்டுதான் இருக்கேன்!” வெற்றியின் ரகசியத்தை சொன்ன ‘தல’ தோனி!

ராஜா சார் இங்க பாருங்க.. குணா பாடலை பயன்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ்! – டேக் செய்து கோர்த்துவிடும் நெட்டிசன்கள்!

வங்கதேசத்தை வச்சு செய்யும் அமெரிக்கா கிரிக்கெட் அணி! தொடரை கைப்பற்றி அதிரடி!

விராட் கோலி தன் சொந்த ஊர் அணிக்காக சென்று விளையாடி கோப்பையை வெல்லவேண்டும் – முன்னாள் வீரர் கருத்து!

ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்பே அமெரிக்கா கிளம்பும் இந்திய அணி வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments