Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உடைந்த கையோடு கிரிக்கெட்: வைரலான கிரிக்கெட்டர்!

Advertiesment
உடைந்த கையோடு கிரிக்கெட்: வைரலான கிரிக்கெட்டர்!
, ஞாயிறு, 16 செப்டம்பர் 2018 (13:40 IST)
14 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் துவங்கியது. வருகிற 28 ஆம் தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் 6 அணிகள் பங்கேற்கின்றன. 
 
துபாயில் தொடங்கிய முதல் போட்டியில் இலங்கை, வங்காளதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
 
ஆட்டத்தின் போது வங்காளதேச வீரர் தமிம் இக்பால் காயமடைந்தார். வலியில் துடித்த அவர் ரிட்டையர்டு ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார். இருப்பினும் ஆட்டத்தின் இறுதியில் மீண்டும் களமிறங்கினார். 
 
அப்போது அவர் ஒரு கையால் மட்டுமே ஆடினார். இதனால் தமிம் இக்பாலுக்கு பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த போட்டியில் வங்கதேச அணி இலங்கை அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கைக்கு அதிர்ச்சி கொடுத்த வங்கதேசம்: 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி