Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாரடைப்பால் சுருண்டு விழுந்து உயிரிழந்த பேட்மிண்டன் வீரர்.! விளையாட்டின் போது நடந்த சோகம்..!!

Senthil Velan
செவ்வாய், 2 ஜூலை 2024 (21:33 IST)
இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் சாம்பியன் ஷிப் பேட்மிண்டன் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த சீனாவைச் சேர்ந்த 17 வயது வீரர் மாரடைப்பு காரணமாக சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  
 
இந்தோனேசியாவின் யோக்யகர்தாவில் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது.  பேட்மிண்டன் போட்டிகளில் சீன வீரர்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஞாயிறு அன்று நடைபெற்ற போட்டியின் போது சீனாவின் 17 வயதான ஜாங் ஜிஜீ ஜப்பானின் கசுமா கவானோவை எதிர்கொண்டு விளையாடினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இருவரும் விட்டுக் கொடுக்காமல் சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.  இருவரும் 11 – 11 என்ற செட் கணக்கில் இருந்தபோது, ஜாங் ஜிஜி-க்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தரையில் விழுந்து துடித்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போட்டி ஏற்பாட்டாளர்கள், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் உள்ளூர் நேரப்படி அன்று இரவு 11:20 மணிக்கு ஜாங் ஜிஜி உயிரிழந்ததாகவும், பேட்மிண்டன் உலகம் ஒரு திறமையான வீரரை இழந்துள்ளது என்றும் பேட்மிண்டன் ஆசியா மற்றும் இந்தோனேசியா பேட்மிண்டன் சங்கம் தெரிவித்துள்ளது. ஜாங் ஜிஜி களத்தில் விழுந்த துடிதுடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

ALSO READ: மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

அவர் சரிந்து கீழே விழுந்ததும் 40 வினாடிகள் அவர் கண்டுகொள்ளப்படாமல் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உடனடி மருத்துவ உதவி அளித்திருந்தால் ஜாங் ஜிஜி உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்: இந்திய அணி தோல்வி..!

இரண்டு இந்திய வீரர்களைக் குறிவைக்கும் கங்குலி… டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு யார் பயிற்சியாளர்?

ஷமி வெளி உலகத்துக்காக ஷோ காட்டுகிறார்… என் மகளுக்கு அவர் வாங்கிக் கொடுத்ததெல்லாம் இலவசம்… முன்னாள் மனைவி விமர்சனம்!

தோனிக்காக விதிகளை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்… முகமது கைஃப் கருத்து!

RCB போட்டிக்குப் பிறகு கோபத்தில் டிவியை உடைத்தாரா தோனி?.. ஹர்பஜன் சிங் சர்ச்ச்சைக் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments