Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கை குலுக்குவதை தவிர்த்த ஆஸ்திரேலியா - நியூசிலாந்து கேப்டன்கள் !

Webdunia
வெள்ளி, 13 மார்ச் 2020 (19:33 IST)
கை குலுக்குவதை தவிர்த்த ஆஸ்திரேலியா - நியூசிலாந்து கேப்டன்கள் !
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வரும் மார்ச் 29 ஆம் தேது தொடங்கவிருந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
இதேபோன்று இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே ஆன அடுத்த இரு ஒருநாள் போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், இன்று ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஆன போட்டியின் போது, கொரோனா வைரஸ் காரணமாக நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனும்  ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பிஞ்சும் டாஸ் போட்ட பின் கைகுலுக்காமல் நகைச்சுவை செய்தனர். அதாவது, இருவரும் கை குலுக்குவது போல குலுக்கி கைகளை விலக்கிக் கொண்டு இருவரும் சிரித்துக் கொண்டனர்.
 
 ரசிகர்கள் இல்லாததால் மைதானம் வெறிச்சோடி காணப்பட்டது. அப்போதும் ஆஸ்திரேலிய வீரர் அடித்த பந்து சிக்ஸர் ஆகி கேலரியில் வந்து விழுந்தது. ரசிகர்கள் இல்லாத காரணத்தால் நியூசிலாந்து அணி வீரர், ஃப்ல்டர் கேலரிக்கு சென்று பந்தை தேடி எடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments