Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி. ஆஸ்திரேலியா 48 ரன்கள் முன்னிலை

Webdunia
திங்கள், 6 மார்ச் 2017 (05:57 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையே பெங்களூரில் நடைபெற்று வரும் 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் வலுவான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.




முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்திரேலியா அணி நேற்று தனது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 237 ரன்கள் குவித்துள்ளது. இந்த ஸ்கோர் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 48 ரன்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மாத்யூ வேட் 25 ரன்களுடனும், மைக்கேல் ஸ்டார்க் 14 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்,. இந்திய வீரர்களான ஜடேஜா மூன்று விக்கெட்டுக்களையும் இஷாந்த் சர்மா, யாதவ் மற்றும் அஸ்வின் தலா ஒரு விக்கெட்டையும் நேற்று கைப்பற்றியுள்ளனர்.

இன்றைய நாள் ஆட்டத்தில் இந்திய அணி மீதமுள்ள 4 ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டுக்களை வீழ்த்துவதன் மூலம் இந்த போட்டியை வெற்றியை நோக்கி கொண்டு செல்ல ஒரு வாய்ப்பாக அமையலாம்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னை கிங் என்று அழைக்காதீர்கள்… பாபர் ஆசம் வேண்டுகோள்!

இப்போதைக்கு ரிஷப் பண்ட்டுக்கு தேவை இல்லை… சூசகமாக பதில் சொன்ன கம்பீர்!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்.. முதல் போட்டி பெங்களூரு குஜராத்

ஜெய்ஸ்வாலுக்கு பதில் வருண் சக்ரவர்த்தி ஏன்?... விளக்கமளித்த கம்பீர்!

சாம்பியன்ஸ் ட்ரோபி தொடரில் இந்திய வீரர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு!

அடுத்த கட்டுரையில்
Show comments