Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முத்தரப்பு போட்டி; பாகிஸ்தானிடம் கெத்து காட்டிய ஆஸ்திரேலியா

Webdunia
திங்கள், 2 ஜூலை 2018 (18:39 IST)
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

 
பாகிஸ்தான், ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் இடையே முத்தரப்பு டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதியது.
 
முதல் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்கள் குவித்தது. 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடியது. 10.5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
 
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அரோன் பின்ச் 33 பந்துகளில் 68 ரன்கள் குவித்து அசத்தினார். ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிகளில் படுதோல்வி அடைந்து பெரும் பினடைவை சந்தித்து. 
 
ஆஸ்திரேலிய அணியின் மோசமான தோல்வி கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்றைய போட்டியின் வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி மீதான் நம்பிக்கை திரும்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்தியா கனடா போட்டியும் மழையால் பாதிக்கப்படுமா?… வானிலை அறிக்கை என்ன சொல்கிறது?

கோலி மட்டுமா யாருமே அந்த மைதானத்தில் ரன்கள் சேர்க்கவில்லை- ஆதரவுக் குரல் தெரிவித்த முன்னாள் பயிற்சியாளர்!

கோலியைப் பற்றி பேச நான் யார்… அவர் மூன்று போட்டிகளில் ரன் அடிக்கவில்லை என்றால்…? –ஷிவம் துபே பதில்!

டி20 போட்டியில் உகாண்டா அணி படுதோல்வி.! ஐந்தே ஓவரில் வெற்றி பெற்ற நியூசிலாந்து..!!

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்… பாகிஸ்தான் கிரிக்கெட் அணியைக் கலாய்க்கும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments