Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா - இங்கிலாந்து: நாளை டி20 போட்டி துவக்கம்!

Webdunia
திங்கள், 2 ஜூலை 2018 (17:56 IST)
இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்துடன் டி20 போட்டில் மோதி வெற்றி பெற்ற கையோடு இங்கிலாந்து எதிராக டி20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடரில் மோதவுள்ளது. 
 
3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டெஸ்டில் விளையாட்டில் டி20 தொடர் நாளை மான்செஸ்டரில் தொடங்குகிறது. இந்த தொடரை பொருத்தவரை இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது இந்தியாவுக்கு சவாலானது.
 
காயம் காரணமாக பும்ரா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் விலகி உள்ளனர். அவர்களுக்கு பதிலாக தீபக் சாஹர், குருணால் பாண்டியா இடம் பெற்றுள்ளனர். இதுவரை இரு அணிகளும் 11 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 5 ஆட்டத்திலும், இங்கிலாந்து 6 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. 
 
அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள்:
 
இந்தியா: விராட் கோலி, ரோகித் சர்மா, தவான், ரெய்னா, தோனி, மணிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், சாஹல், ஹர்த்திக் பாண்டியா, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல், கேஎல் ராகுல், குருணால் பாண்டியா, தீபக் சாஹர்.
 
இங்கிலாந்து: மோர்கன், ஜேசன் ராய், ஜோ ரூட், அலெக்ஸ் ஹேல்ஸ், பட்லர், பேர்ஸ்டோவ், மொயீன் அலி, ஜேக் பால், சாம் குர்ரான், டாம் குர்ரான், ஜோர்டான், பிளங்கெட், அடில் ரஷீத், டேவிட் வில்லே.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ராவுக்கும் ரோஹித்துக்கும் நன்றி… மீண்டும் இந்திய ரசிகர்களை ‘சைலன்ஸ்’ ஆக்கிய கம்மின்ஸ்!

கடுமையாகவே போராடினோம்… கேப்டன் பும்ரா வருத்தம்!

‘எங்களுக்கு என்ன கிரிக்கெட்டா தெரியும்?.. நாங்க டிவில பேசுறவங்கதானே?’- ஊமைக் குத்தாய் குத்திய கவாஸ்கர்!

மாற்றங்கள் நன்மைக்கே…இந்திய அணி குறித்து கம்பீர் கருத்து!

மூன்றாம் நாளில் இரு அணி வீரர்களும் பிங்க் நிற ஜெர்ஸியில் விளையாடக் காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments