Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெல்போர்ன் டெஸ்ட்- எல்லை மீறும் ஸ்லெட்ஜிங் !

Webdunia
சனி, 29 டிசம்பர் 2018 (09:24 IST)
நடந்து வரும் ஆஸ்திரேலியா – இந்தியா தொடரில் இருநாட்டு வீரர்களும் ஒருவரையொருவர் வம்பிழுக்கும் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவுடனான கிரிக்கெட் போட்டிகள் என்றாலே கிரிக்கெட் ரசிகர்களுக்கு நியாபகம் வரும் விஷயங்களில் முக்கியமானது ஸ்லெட்ஜிங். ஆஸ்திரேலியா அணி ஜாம்பவானாக இருந்த காலம் முதல் இன்று தனக்கான இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள போராடும் வரை ஸ்லெட்ஜிங்லில் புகழ் பெற்றது ஆஸி அணி. ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான ஸ்லெட்ஜிங்குகள் உலகப் புகழ் பெற்ற்வை.

தற்போது நடந்து வரும் டெஸ்ட் தொடரும் இதற்கு விதிவிலக்கல்ல. சச்சின், டிராவிட், லக்‌ஷ்மன் ஆகியோரின் காலத்தில் ஸ்லெட்ஜிங்களுக்கு பேட்டால் மட்டுமே பதில் கூறி வந்த இந்தியா தற்போது கோஹ்லி காலத்தில் வாயாலும் பதில் கூறி வருகிறது.

நடந்து வரும் மூன்றாவது மெல்போர்ன் டெஸ்ட்டில் ஆஸி விக்கெட் கீப்பரும் கேப்டனுமான டிம் பெய்ன் ரோஹித் ஷர்மா மற்றும் ரிஷாப் பண்ட் ஆகியோரிடம் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டு வருகிறார். முதல் இன்னிங்ஸில் நிதானமாக விளையாடிய ரோஹித்தை தூண்டும் விதமாக ‘ இப்போது நீ ஒரு சிக்ஸ் அடித்தால் உடனே நான் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரசிகனாக மாறிவிடுவேன்’ எனக் கூறி அவரை திசை திருப்ப முயன்றார். ஆனால் அதைக் காதில் வாங்கிக்கொள்ளாத ரோஹித் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.
அதேப்போல இரண்டாவது இன்னிங்ஸில் ரிஷப் பாண்ட் பேட் செய்யும் போது பாண்ட் ஒருநாள் தொடருக்கு தேர்வு செய்யப்படாததைக் குத்திக்காட்டும் விதமாக ‘ ரிஷப், நான் என் மனைவியோடு சினிமாவுக்கு சென்று வரும் வரை எனதுக் குழந்தைகளைப் பார்த்துக் கொளவாயா ? ‘ என நக்கலாகக் கேட்டார். இந்த ஸ்லெட்ஜிங்கில் ஸ்லிப்பில் நின்ற பிஞ்ச்சும் சேர்ந்து கொண்டார். ஆனால் நிதானமாக இருந்த பாண்ட் ஆட்டத்தில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

ஆனால் எல்லா நேரமும் அப்படி இல்லாமல் பாண்ட்டும் பெய்ன் பேட் செய்யும் போது ‘ எல்லோரும் புஜாரா ஆக முடியாது ‘ என நக்கலடிக்கவும் தவறுவதில்லை. தற்போதையக் காலகட்டத்தில் இணையதள ஸ்டீரிமிங் ஒளிப்பரப்புதலில் வர்ணனைகளை ஸ்டம்ப் மைக் ஒலியோடு கேட்கும் வசதிகள் இருப்பதால் சமீப காலமாக இதுபோன்ற ஸ்லெட்ஜிங்குகள் ரசிகர்களின் காதுகளையும் எட்ட ஆரம்பித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

21 ஆண்டுகளுக்கு முன் சேவாக் இன்னிங்ஸைப் பார்த்தது போல இருந்தது.. கோன்ஸ்டாஸைப் பாராட்டிய ஆஸி முன்னாள் வீரர்!

நான் சரியாக விளையாடவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்… ஆனால்?- கோலி பதில்!

பும்ரா பந்தில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சிக்ஸர்… அடித்து நொறுக்கிய இளம் வீரர்!

4வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி: பும்ரா பந்தை அடித்து நொறுக்கும் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள்

ஐசிசி தரவரிசையில் முதலிடம்… அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா!

அடுத்த கட்டுரையில்
Show comments