இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 443 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 151 ரன்களுக்குள் சுருண்டது. எனவே ஆஸ்திரேலிய அணி ஃபாலோ ஆனை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.
ஆனால் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு ஃபாலோ ஆன் கொடுக்காமல், இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. இதன் விளைவாக இந்திய அணி சற்றுமுன் வரை 26 ரன்களுக்கு நான்கு முக்கிய விக்கெட்டுக்களான விஹாரி, புஜாரே, ரஹானே மற்றும் கேப்டன் விராத் கோஹ்லி விக்கெட்டுகக்ளை இழந்தது. கம்மின்ஸ் நான்கு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்.
இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இந்த போட்டி டிரா ஆக வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது.