Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசியா கோப்பை கால்பந்து: இந்தியா அதிர்ச்சி தோல்வி

Webdunia
வெள்ளி, 11 ஜனவரி 2019 (08:18 IST)
ஆசிய கோப்பை கால்பந்து போட்டிகள் கடந்த 5ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் ஏ பிரிவில் உள்ள இந்திய அணி தாய்லாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்த நிலையில் நேற்று ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக விளையாடியது.

இந்த போட்டியில் இந்திய அணிக்கு கோல் அடிக்க மூன்று வாய்ப்புகள் கிடைத்தபோதிலும் மூன்றையும் இந்திய வீரர்கள் கோலாக மாற்ற தவறினர். இந்த நிலையில்  ஆட்டத்தின் 41-வது நிமிடத்தில் ஐக்கிய அரபு அமீரக வீரர் முபாரக் முதல் கோல் அடித்து தனது அணியை 1-0 என்ற முன்னிலைக்கு கொண்டு வந்தார். இந்த கோலுக்கு பதில் கோல் அடிக்க இந்திய வீரர்கள் பெரும் முயற்சி செய்தும் முடியவில்லை. இந்த நிலையில் 88வது நிமிடத்தில் ஐக்கிய அரபு அமீரக அணி இரண்டாவது கோலை பதிவு செய்ததால் அந்த அணியின் வெற்றி உறுதியாகியது.  இதனால் இந்திய அணி 0-2 என்ற புள்ளிக்கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

நேற்று நடைபெற்ற மேலும் இரண்டு போட்டிகளில் தாய்லாந்து மற்றும் ஜோர்டான் அணிகள் வெற்றி பெற்றன. இன்று பாலஸ்தீன் - ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் - சீனா, கிர்கிஸ்தான் - தென்கொரியா அணிகள் மோதவுள்ளன

தொடர்புடைய செய்திகள்

இதுவும் நல்லதுதான்… விராட் கோலியின் ஃபார்ம் குறித்து பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கருத்து!

இந்திய அணிக்கு பயிற்சியாளர் ஆகிறாரா இந்த வெளிநாட்டு முன்னாள் வீரர்?

எங்கள் தோல்விக்கு யார் பொறுப்பு… பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் கருத்து!

சூப்பர்-8 சுற்றுக்கு வங்கதேசம் தகுதி...! நேபாளம் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி..!!

சூப்பர் 8 போட்டி அட்டவணை வெளியீடு! இந்தியாவுடன் மோதும் அணிகள் எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments