Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுவரை எதிர்த்து விமர்சனம்.. பேட்டை தூக்கி வீசியதால் அஸ்வினுக்கு அபராதம்.. டி.என்.பி.எல்-இல் பரபரப்பு..!

Siva
செவ்வாய், 10 ஜூன் 2025 (08:03 IST)
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இதில் நடுவர் உடன் வாக்குவாதம் செய்ததோடு பேட்டையும் க்ளவுசையும் தூக்கி வீசியதற்காக திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வினுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
திண்டுக்கல் மற்றும் திருப்பூர் அணிகளுக்கு இடையிலான போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவையில் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி, பெரும் 93 ரன்களுக்கு ஆளவட்டானது. தொடக்க ஆட்டக்காரராக கேப்டன் அஸ்வின், 18 ரன்களில் அவுட் ஆனார். அவர் சாய்கிஷோரின் பந்தில் LBW முறையில் அவுட் என அறிவிக்கப்பட்டது.
 
இந்த நடுவரின் தீர்ப்பை அஸ்வின் கடுமையாக எதிர்த்தார். DRS முறையில் முறையிட முடியாத நிலையில், அவர் மிகுந்த கோபத்துடன் மைதானத்திலிருந்து வெளியே சென்றார். அப்போது தனது பேட்டை காலால் ஓங்கி அடித்ததாகவும், கையுறைகளை கழட்டி தூக்கி எறிந்ததாகவும் தெரிகிறது.
 
இதனை அடுத்து, போட்டி முடிந்த பிறகு விசாரணை நடைபெற்றது. அப்போது நடுவருக்கு எதிராக அதிருப்தியை வெளிப்படுத்தியதற்காக 10% மற்றும் விளையாட்டு உபகரணங்களை தவறாக பயன்படுத்தியதற்காக 20%, மொத்தம் 30% அபராதம் விதிக்கப்பட்டது.
 
அஸ்வின், இந்த அபராதத்தை ஏற்றுக்கொண்டதாக டிஎன்பிஎல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
இந்த போட்டியில் அஸ்வின் அவுட் ஆனதும், தொடர்ச்சியாக அனைத்து விக்கெட்டும்  விழுந்தது. வெறும் 94 ரன்கள் இலக்காக இருந்ததை திருப்பூர் அணி மிக எளிதாக எடுத்து, வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை ஐந்தாவது டெஸ்ட்… ஓவல் மைதானத்தில் இந்திய அணியின் சோக வரலாறு!

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட்… அறிமுகம் ஆகிறாரா அர்ஷ்தீப் சிங்?

ஒரே தொடர்தான்… சராசரியில் ஏற்றம் கண்ட ஷுப்மன் கில்!

கம்பீரைத் தூக்கினால் விராட் கோலி மீண்டும் வருவார்… யோக்ராஜ் சிங் கருத்து!

ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா இல்லையா?.. கடைசி நேரத்தில் அதிர்ச்சி செய்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments