Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல்வியை வார்த்தையில் மறைப்பவர் அல்ல கோலி: தோனியை தாக்கும் ஆகாஷ் சோப்ரா...

Webdunia
செவ்வாய், 23 ஜனவரி 2018 (21:03 IST)
தென் ஆப்பிரிக்கா அணியிடம் இந்தியா இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியுற்று தொடை இழந்தது. இதன் பின்னர் பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அதில் கோலிக்கு ஆதரவாகவும், எதிர்ப்புகளை தவிர்த்தும் வந்துள்ளன.  
 
இது குறித்து முன்னாள் இந்திய அணி வீரர் ஆகாஷ் சோப்ரா கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். அந்த கட்டுரை கோலியை புகழ்ந்து பேசினாலும், மறைமுகமாக தோனியை தாக்குவதாய் அமைந்துள்ளது. 
 
இந்திய அணி சந்தித்த தோல்வி வழக்கமானதோ, எதிர்பார்க்கப்பட்டதோ அல்ல. கோலி ஒரு உணர்வுபூர்வமான கிரிக்கெட் வீரர். ஒரு பேட்ஸ்மெனாக தவறு செய்யும் போது அதனை ஒப்புக் கொள்ளக்கூடியவர், அதே போல் அணி சரியாக விளையாட போதும் அதனையும் ஒப்புக் கொள்வார். 
 
அவர் புரோசஸ், எதிர்காலத்திற்காக திட்டமிடுகிறோம் (இவை தோனி குறிப்பிடும் வார்த்தைகள்) போன்ற வார்த்தைகள் பின்னால் தோல்வியை மறைப்பவர் அல்ல.  ஆனாலும் இந்திய அணி நம்பர் 1 அணிதானா என்ற கேள்வியையும், 12 கேட்ச்களை நழுவ விட்டுவிட்டு அதற்கு தயாரிப்பின்மையையும் தென் ஆப்பிரிக்க சூழலையும் குறை கூற முடியாது. 
 
இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றிக்கு நெருக்கமாகவே வந்தது இந்திய அணி தோல்வியுற்றது. சரியான அணி சேர்க்கையை அமைக்காதது விவாதங்களுக்கும் வருத்தங்களுக்கும் உரியதாக இருக்கலாம் என எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments