Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் பிறந்தநாட்டுக்கு எதிராக விளையாடுவது சிலிர்ப்பாக உள்ளது… நியுசி வீரர் அஜாஸ் படேல்!

Webdunia
திங்கள், 24 மே 2021 (12:10 IST)
இந்திய அணிக்கு எதிராக ஜூன் 18 ஆம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டியில் நியுசிலாந்து விளையாடுகிறது.

கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இந்தியா மற்றும் நியுசிலாந்து ஆகிய அணிகள் ஜூன் 18 ஆம் தேதி மோத உள்ளன. உலகின் புகழ் பெற்ற மைதானமான இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் இந்த தொடர் நடக்க உள்ளது.

இந்த போட்டியில் நியுசிலாந்து அணி சார்பாக விளையாடும் வீரர்களில் அந்த அணியின் வீரர் அஜாஸ் பட்டேலும் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜாஸ் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர். நியுசிலாந்துக்கு குடியேறி அங்கிருந்து கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கியுள்ளார். இந்த போட்டியில் விளையாடுவது குறித்து பேசியுள்ள அஜாஸ் ‘நான் பிறந்த நாட்டுக்கு எதிராக கிரிக்கெட்டின் தாயகம் என சொல்லப்படும் இங்கிலாந்தில் விளையாடுவது சிலிர்ப்பான அனுபவமாக இருக்கும்.  நான் பிறந்தநாட்டுடன் , எனது தாய்நாட்டுக்காக விளையாடுவது மறக்க முடியாத அற்புதமான அனுபவமாக இருக்கும்’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்.. இந்திய மகளிர் அணி அபார வெற்றி..!

புற்றுநோயை வென்றவர் யுவ்ராஜ் சிங்… ஆனால் அவரை உடல்தகுதியைக் காரணம் காட்டி நீக்கினார்கள்.. கோலியை குற்றம்சாட்டும் உத்தப்பா!

இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளாரா தோனி?

நான் இந்திய அணிக்குக் கேப்டன் ஆகாததற்கு இதுதான் காரணம்.. அஸ்வின் ஓபன் டாக்!

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ஆஸி அணியில் இடம்பெற மாட்டாரா பேட் கம்மின்ஸ்?

அடுத்த கட்டுரையில்
Show comments