Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து சூழலுக்கு ஏற்ப ரோஹித் ஷர்மா விளையாடுவார்… பயிற்சியாளர் நம்பிக்கை!

Webdunia
திங்கள், 24 மே 2021 (12:04 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரோஹித் ஷர்மா இங்கிலாந்தில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என அவரின் சிறுவயது பயிற்சியாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்து அணியுடனான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஆகியவற்றில் விளையாடுவதற்காக நீண்ட சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்நிலையில் ரோஹித் ஷர்மாவின் சிறு வயது பயிற்சியாளர் தினேஷ் லாட் ’அண்மையில் இங்கிலாந்துடன் நடந்த தொடரில் ரோஹித் சிறப்பாக விளையாடினார். ஆனால் இங்கிலாந்தில் இன்னும் சிறப்பாக கவனம் செலுத்தி விளையாட வேண்டும். இங்கிலாந்தில் இருக்கும் வேகப்பந்துவீச்சுக்கு ஏதுவான ஆடுகளம் சவாலானதாகவே இருக்கும். அந்த ஆடுகளங்களுக்கு ஏற்ப அவர் தகவமைத்துக் கொண்டு விளையாடுவார்’ என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

பொய் சொல்லி விராட்டின் ஷூவை வாங்கினேன்.. சதம் குறித்து நிதீஷ்குமார் பகிர்ந்த தகவல்!

இரண்டாவது இன்னிங்ஸுக்கு இரண்டு பந்துகளா?.. மீண்டும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக ஒரு விதி!

மெதுவாகப் பந்துவீசினால் கேப்டனுக்குத் தண்டனையா?... ஐபிஎல் விதியில் தளர்வு!

சிஎஸ்கே இந்த முறை ப்ளே ஆஃப்க்கு செல்லாது… ஏ பி டிவில்லியர்ஸ் ஆருடம்!

அடுத்த கட்டுரையில்
Show comments