Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவிற்கு 5 வது தங்கம்

Webdunia
ஞாயிறு, 8 ஏப்ரல் 2018 (09:25 IST)
காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை பூனம் யாதவ் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதன்மூலம் இந்தியா 5 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 21-வது காமன்வெல்த் போட்டியில் பளுதூக்கும் பிரிவில் இந்தியாவுக்கு ஏற்கனவே இரண்டு தங்கம் கிடைத்திருந்தது. இதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற ஆடவர் 77கிலோ பளுதூக்கும் பிரிவில் தமிழக வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம் தங்க பதக்கம் வென்றார். மேலும் 89 கிலோ எடை பிரிவு பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் வெங்கட் ராகுல் தங்கம் வென்றார். 
 
இந்நிலையில் இன்று நடைபெற்ற மகளிருக்கான 69 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை பூனம் யாதவ் தங்கப் பதக்கம் வென்றார். இந்தியா இதுவரை 5 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணித் தக்கவைக்கும்- கம்பீர் நம்பிக்கை!

இரண்டு வாரங்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய வினோத் காம்ப்ளி!

சிட்னி டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

கோலி இடத்தில் நிதீஷ்குமார் இறங்க வேண்டும்… பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கருத்து!

மெல்போர்ன் டெஸ்ட் தோல்விக்குப் பிறகு வீரர்கள் மேல் கோபத்தைக் காட்டிய கம்பீர்?

அடுத்த கட்டுரையில்
Show comments