Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்

Webdunia
ஞாயிறு, 8 ஏப்ரல் 2018 (08:02 IST)
இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டிகள் நேற்று வண்ண வண்ண நிகழ்ச்சிகளுக்கு பின்னர் தொடங்கியது. முதல் போட்டியில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, முதலில் பந்துவீச முடிவு செய்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

சிஎஸ்கே அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான வாட்சன், ராயுடு, ரெய்னா, தோனி ஆகியோர் சொற்ப ரன்களில் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர். இந்த நேரத்தில் களமிறங்கிய பிராவோ அதிரடியாக 30 பந்துகளில் 68 ரன்கள் அடித்து வெற்றி நோக்கி அணியை அழைத்து சென்றார். இருப்பினும் ஸ்கோர் 159 ஆக இருக்கும் நிலையில் அவர் அவுட் ஆனார்

இந்த நிலையில் கடைசி ஓவரில் சிஎஸ்கே அணிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. முதல் மூன்று பந்துகளில் ஜாதவ் ரன் ஏதும் எடுக்காததால் டென்ஷன் அதிகமானது. ஆனால் 4வது மற்றும் 5வது பந்துகளில் சிக்ஸர் மற்றும் பவுண்டரியை ஜாதவ் அடித்ததால் சிஎஸ்கே அணி 169 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த தொடரின் முதல் வெற்றியை சிஎஸ்கே அணி பதிவு செய்தது அந்த அணியின் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தது. பிராவோ ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன். முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த டெல்லி..!

ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு நியாயம்… திலக் வர்மாவுக்கு ஒரு நியாயமா?- காட்டமாக விமர்சித்த இந்திய வீரர்!

ஈகோ பார்க்காமல் டைம் அவுட்டில் ஓடிவந்த ரோஹித் ஷர்மா… இவர்தான்யா கேப்டன் என சிலாகிக்கும் ரசிகர்கள்!

திலக் வர்மாவை வெளியே அனுப்பியது ஏன்?.. ஹர்திக் பாண்ட்யா கொடுத்த ‘அடடே’ விளக்கம்!

17 வருட ஐபிஎல் கிரிக்கெட்டில் எந்தவொரு கேப்டனும் படைக்காத சாதனை… ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஆறுதலான விஷயம்!

அடுத்த கட்டுரையில்
Show comments