Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு 4வது பதக்கம் உறுதி! இறுதி போட்டிக்கு முன்னேறிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்!

Prasanth Karthick
புதன், 7 ஆகஸ்ட் 2024 (08:01 IST)

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பிரபல இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தற்போது இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

 

 

பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டிகள் நாளுக்கு நாள் பரபரப்பை எட்டி வருகின்றது. இதில் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் பல பதக்கங்களை பெற்று முதல் இடத்திற்காக போட்டி போட்டு வரும் நிலையில் இந்தியா இதுவரை சில வெண்கல பதக்கங்களை மட்டுமே வென்றுள்ளது.

 

இந்த முறை ஒலிம்பிக்ஸில் இந்தியா ஒரு தங்கமாவது வெல்லாதா என்ற எதிர்பார்ப்புடன் பலரும் காத்திருக்கும் நிலையில், அந்த கனவை அடையும் முயற்சியில் முன்னேறியுள்ளார் வினேஷ் போகத். பெண்களுக்கான மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் 50 கிலோ எடைப் பிரிவின் அரையிறுதிப் போட்டியில் கியூபா வீராங்கனையை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

 

இதன் மூலம் ஒலிம்பிக்ஸ் வரலாற்றிலேயே மல்யுத்த போட்டியில் இறுதி போட்டிக்கு முன்னேறிய முதல் வீராங்கனை என்ற சாதனையையும் வினேஷ் போகத் படைத்துள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

 

Edit by Prasanth.K

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனி விரும்பும்வரை சி எஸ் கே அணியின் கதவுகள் திறந்தே இருக்கும்… காசி விஸ்வநாதன் பேட்டி!

கம்பீருக்கு தயாராகிக் கொண்டிருக்கும் ஆப்பு… பார்டர் கவாஸ்கர் தொடர்தான் கடைசி வாய்ப்பு – பிசிசிஐ ஆலோசனை!

என்னால் கிரிக்கெட் விளையாட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.. ஐபிஎல் எண்ட்ரி குறித்து ஆண்டர்சன் பதில்!

விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து முடிவை மாற்றிக்கொண்ட ரோஹித் ஷர்மா!

அடுத்தடுத்து இரண்டு சதம்… இந்திய வீரர்கள் யாரும் படைக்காத சாதனையை நிகழ்த்திய சஞ்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments