Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கைக்கு கொடுத்த இமாலய இலக்கு.. அசத்திய இந்திய பேட்ஸ்மேன்கள்..!

Advertiesment
இலங்கைக்கு கொடுத்த இமாலய இலக்கு.. அசத்திய இந்திய பேட்ஸ்மேன்கள்..!
, வியாழன், 2 நவம்பர் 2023 (18:07 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணி களுக்கிடையே இன்று நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி  359 என்ற இமாலய இலக்கை இலங்கைக்கு கொடுத்துள்ள நிலையில் இந்தியாவுக்கு இன்னொரு வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நான்கு ரன்களில் அவுட் ஆனாலும் சுப்மன் கில், விராட் கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய மூவரும் அபாரமாக விளையாடினார். இதனை அடுத்து கடைசி நேரத்தில் ரவீந்திர ஜடேஜா அதிரடியாக விளையாடிய நிலையில் இந்திய அணி 50 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் எடுத்துள்ளது.

இதனை அடுத்து 358 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் இலங்கை அணி விளையாட உள்ள நிலையில் இந்த இமாலய இலக்கை எட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சுப்மன் கில்: 92
விராத் கோஹ்லி: 88
ஸ்ரேயாஸ் அய்யர்: 82
ஜடேஜா: 35

மதுஷாங்கா: 5 விக்கெட்டுக்கள்
சமீரா; 1 விக்கெட்

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சதத்தை நூலிழையில் தவறவிட்ட சுப்மன் கில்.. விராத் சதமடிப்பாரா?