Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மான்செஸ்டர் டெஸ்ட் ரத்தால் இவ்வளவு நஷ்டமா?

Advertiesment
மான்செஸ்டர் டெஸ்ட் ரத்தால் இவ்வளவு நஷ்டமா?
, சனி, 11 செப்டம்பர் 2021 (16:25 IST)
ஓல்ட் ட்ரபோர்ட் டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அந்த போட்டி நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெற இருந்த ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரத்து செய்யப்பட்டதாக சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பிசியோதெரபி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்றாலும் இருநாட்டு கிரிக்கெட் போர்டு அதிகாரிகள் ஆலோசனை செய்து இந்த போட்டியை பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்து உள்ளனர்.

போட்டி நடக்காததற்கு இந்திய அணியில் மேலும் சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதே காரணம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட ஐந்தாவது டெஸ்ட் போட்டி திரும்ப நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2022 ஆம் ஆண்டு இந்த ஒரு டெஸ்ட் போட்டி மட்டும் திரும்ப நடத்தப்படலாம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு இந்திய மதிப்பில் சுமார் 200 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதை ஈடுகட்டும் வகையில் பிசிசிஐயிடம் இப்போது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்னை உதவாக்கரை என நினைக்கிறார்கள்… ஆனால்? உணர்ச்சி வசப்பட்ட தாஹீர்!