Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் சொதப்பிய சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள்.. ஐதராபாத் அணிக்கு கொடுத்த டார்கெட் இவ்வளவுதான்..

Siva
வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (21:16 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சிஎஸ்கே மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் போட்டியில் சிஎஸ்கே அணி பேட்ஸ்மேன்கள் சொதப்பியதன் காரணமாக மிகக் குறைந்த ரன்களே ஹைதராபாத் அணிக்கு இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 
இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணி டாஸ் வென்ற நிலையில் அந்த அணி முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ரச்சின் ரவீந்திரா  மற்றும் ருத்ராஜ் ஆகிய இருவருமே 12 மற்றும் 26 ரன்கள் எடுத்து அவுட் ஆன நிலையில்  ரஹானே , ஷிவம் துபே ஆகிய இருவர் மட்டுமே ஓரளவுக்கு நிலைத்து ஆடினார்

அதன் பிறகு கடைசி நேரத்தில் ஜடேஜா அதிரடியாக விளையாடினாலும் பெரிய அளவில் ஸ்கோர் வரவில்லை. ஆட்டநேர இறுதியில்  20 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் மட்டுமே சிஎஸ்கே எடுத்துள்ளது

இந்த நிலையில் 166 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் ஹைதராபாத் அணி விளையாட உள்ளது. அந்த அணியில் அபிஷேக் ஷர்மா, மார்க்கம், கிளாசன், பேட் கம்மின்ஸ் உள்ளிட்ட தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் இருப்பதால் இந்த இலக்கை எட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

முன்னதாக ஹைதராபாத் அணியின் புவனேஷ் குமார், நடராஜன், பேட் கம்மின்ஸ், ஷபாஸ் அகமது மற்றும் உனாகட் ஆகிய அனைவரும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஸ்திரேலியாவை விட 145 ரன்கள் முன்னிலை! திரும்ப வருவாரா பும்ரா? நாளை என்ன நடக்கும்?

ஓய்வை அறிவிக்கப் போகிறாரா ரோஹித் சர்மா! - அவரே அளித்த பதில்!

181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஆஸ்திரேலியா.. இந்தியாவின் 2வது இன்னிங்ஸ் தொடக்கம்..!

திடீரென மைதானத்தை விட்டு வெளியேறிய பும்ரா; மருத்துவமனையில் சிகிச்சை! - என்ன ஆச்சு?

இந்திய பவுலர்கள் அபாரம்.. 6 விக்கெட்டுக்களை இழந்து தத்தளிக்கும் ஆஸ்திரேலியா..!

அடுத்த கட்டுரையில்
Show comments