Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

IPL 2024: சன்ரைசர்ஸ் சாதனையை முறியடிக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்? – இன்று CSK vs SRH மோதல்!

Advertiesment
CSK vs SRH

Prasanth Karthick

, வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (09:31 IST)
ஐபிஎல் சீசனின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.



நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 2ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது. சன்ரைசர்ஸ் அணி 3ல் இரண்டு தோல்வியும் ஒரு வெற்றியும் பெற்றுள்ளது. அந்த ஒரு போட்டி ஐதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இந்த மைதானத்தில் நடந்த போட்டியில்தான் ஐதராபாத் அணி 277 ரன்களை குவித்து ஐபிஎல்லில் ஆர்சிபியின் அதிகபட்ச ரன்கள் சாதனையை முறியடித்தது.

இன்று அதே மைதானத்தில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டி நடைபெற உள்ளது. ராஜீவ்காந்தி மைதானம் பேட்டிங்கிற்கு சப்போர்ட் செய்யும் மைதானம் என்பதால் இன்று நடைபெற உள்ள போட்டியிலும் இலக்கு 200+ என்ற ரேஞ்சில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சிஎஸ்கேவை பொறுத்தவரை பேட்டிங் லைன் அப் ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா, ஷிவம் துபே, ரஹானே என நல்ல நிலையில் உள்ளது. பவுலிங்கில் பதிரானா, முஸ்தபிசுர் ரஹ்மான், ஜடேஜா நம்பிக்கை அளிக்கின்றனர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பொறுத்தவரை ட்ராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஹென்ரிக் க்ளாசன், மர்க்ரம் என ஸ்ட்ராங் லைன் அப் உள்ளது. ஆனால் எவ்வளவு ரன்கள் அடிக்கின்றனரோ அதற்கு நிகராக ரன்களை விடுமளவிற்கு பவுலிங் யூனிட் பலவீனமாகவே இருக்கிறது. அதனால் பெரிய டார்கெட் வைத்தாலும் சேஸிங்கில் ரன்களை சன்ரைசர்ஸ் கட்டுப்படுத்துவதில் சிரமம் உள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற உள்ள இந்த போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மைதானம் பேட்டிங் பிட்ச் என்பதால் சென்னை அணி டாஸ் வென்று பேட்டிங் எடுத்தால் அதிரடியாக ஆடி சன்ரைசர்ஸின் 277 சாதனையை முறியடிக்க முயலுமா என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாம் இந்த தவறை செய்தாலே மேட்ச்சை இழக்கிறோம் என்று அர்த்தம்… குஜராத் கேப்டன் கில் ஆதங்கம்!