Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரிஸ்க் எடுத்து டிக்ளேர் செய்த இந்திய அணி.. நாளை முடிவு தெரியுமா?

Advertiesment
India vs Bangladesh Test Match in Kanpur: Will the Final Day Bring a Decisive Result?

Mahendran

, திங்கள், 30 செப்டம்பர் 2024 (17:53 IST)
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், இந்திய அணி ரிஸ்க் எடுத்து டிக்ளர் செய்துள்ளது. நாளை இறுதி நாளில் முடிவு தெரியுமா என்பது காத்திருந்து பார்க்க வேண்டும்.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த 27 ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் ஆட்டத்தின் பாதியில் மழை குறுக்கிட்டது.

இரண்டாம் மற்றும் மூன்றாம் நாள் ஆட்டம் மழையால் தடைபட்ட நிலையில், இன்று நான்காவது நாள் ஆட்டம் நடைபெற்றது. இன்றைய ஆட்டத்தில், வங்கதேச அணி 233 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸ் முடித்தது.

அதைத்தொடர்ந்து, இந்தியா அதிரடியாக விளையாடி 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்தது டிக்ளேர் செய்தது. இதற்குப் பின்பு, வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் எடுத்துள்ளது.

நாளை ஒரே ஒரு நாள் மட்டும் மீதம் இருக்கும் நிலையில், வங்கதேச அணியை குறைந்த ஸ்கோரில் வீழ்த்தி, தேவையான ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெறுமா என்பது காத்திருந்து பார்க்க வேண்டும்.


Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

233 ரன்களில் சுருண்ட வங்கதேசம்.. பேட்டிங்கில் விளாசும் ரோஹித் - ஜெய்ஸ்வால்