Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுக்கு தோனியை அணியில் எடுக்காமலேயே இருக்கலாம்… என்ன இப்படி பொங்கிட்டாரு பஜ்ஜி?

Webdunia
திங்கள், 6 மே 2024 (09:03 IST)
நேற்று நடந்த முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் மோதிய நிலையில் சென்னை அணி சூப்பர் வெற்றியை பெற்றது. இந்தபோட்டியில் சென்னை அணி முதலில் பேட் செய்து 169 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 139 ரன்கள் மட்டுமே பெற்று 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் சி எஸ் கே அணி பேட் செய்து கொண்டிருந்த போது தொடர்ந்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. அப்போது தோனி இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஷர்துல் தாக்கூர் இறங்கி அவுட் ஆன பின்னர்தான் ஒன்பதாவது வீரராக களமிறங்கினார்.

வந்ததும் முதல் பந்திலேயே பவுல்ட் ஆகி வெளியேறினார். இதுபற்றி பேசியுள்ள முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் “தோனி ஒன்பதாவது இடத்தில்தான் இறங்குவார் என்றால் அவருக்கு பதில் ஒரு பவுலரை அணியில் எடுக்கலாம். அவரால் முன்வரிசையால் விளையாட முடியாது என்றால் அதற்கு விளையாடாமலேயே இருக்கலாம்” என தடாலடியாக பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

களத்தில் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்.. கோலி குறித்து சஞ்சய் பாங்கர் கருத்து!

பயிற்சியின் போது இடது காலில் காயமான ரோஹித் ஷர்மா… வைரலான புகைப்படம்!

பயிற்சியின் போது காயமடைந்த முன்னணி வீரர்… இந்திய அணிக்குப் பின்னடைவு!

ஜாகீர் கானை பாக்குற மாதிரியே இருக்கு! சிறுமி பந்து வீசும் வீடியோவை ஷேர் செய்த சச்சின் டெண்டுல்கர்!

சாம்பியன்ஸ் ட்ராபி விவகாரம்; பாகிஸ்தானுக்கு ரூ.38 கோடி வழங்கும் ஐசிசி! - ஆகாஷ் சோப்ரா கடும் விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments