தோனியின் டக் அவுட்டை ஏன் கொண்டாடவில்லை?… ஹர்ஷல் படேல் சொன்ன அடடே காரணம்!

vinoth
திங்கள், 6 மே 2024 (07:12 IST)
நேற்று நடந்த முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் மோதிய நிலையில் சென்னை அணி சூப்பர் வெற்றியை பெற்றது. இந்தபோட்டியில் சென்னை அணி முதலில் பேட் செய்து 169 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 139 ரன்கள் மட்டுமே பெற்று 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த வெற்றியின் மூலம் சி எஸ் கே அணியின் ப்ளே ஆஃப் கனவு பிரகாசமாகியுள்ளது. இந்த போட்டியில் சென்னை அணியின் தூண்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனி பேட்டிங் செய்ய வந்த போது அவரை முதல் பந்திலேயே பவுல்ட் ஆக்கி வெளியேற்றினார் பஞ்சாப் வீரர் ஹர்ஷல் படேல்.

தோனியின் விக்கெட் விழுந்ததும் மைதானமே நிசப்தமானது. ஆனால் தோனியின் விக்கெட்டை எடுத்தபோது ஹர்ஷல் படேல் கொண்டாட்டத்தில் ஈடுபடவில்லை. இதுபற்றி இன்னிங்ஸ் பிரேக்கில் பேசிய அவர் “நான் தோனி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அதனால்தான் அவர் விக்கெட்டை எடுத்த போதும் நான் கொண்டாடவில்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கௌகாத்தி டெஸ்ட்… டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா எடுத்த முடிவு!

ஒரே நாளில் அதிக விக்கெட்கள்… ஆஸ்திரேலியாவுக்கு ஒரு நீதி.. இந்தியாவுக்கு ஒரு நீதி- அஸ்வின் காட்டம்!

பந்துவீச்சில் பதிலடி கொடுத்த இங்கிலாந்து.. 9 விக்கெட்டுக்களை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்..!

ஆஷஷ் தொடரில் அதிர்ச்சி ஆரம்பம்.. 172 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல்-அவுட்..! 7 விக்கெட் வீழ்த்திய ஸ்டார்க்..!

ஸ்மிருதி மந்தனா திருமண தேதி அறிவிப்பு.. பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments