இந்திய சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் தமிழ் ஸ்டுடியோ தொடர்ந்து நூறு இந்திய திரைப்படங்களை திரையிட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக 30 இந்தியத் திரைப்படங்கள் திரையிடப்பட்டது. அடுத்தக் கட்டமாக திரையிடப்படும் படங்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது கட்டமாக நடக்கும் இந்த திரையிடலுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது. அதுப் பற்றிய விபரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. எல்லாம் நாட்களும் திரையிடல் மாலை 6 மணிக்கு தொடங்கும்.
இந்திய சினிமா நூற்றாண்டை தமிழ்நாட்டில் கொண்டாடுவதால், தமிழ் திரைப்படங்கள் அதிகளவில் திரையிடபடுகிறது. தவிர இந்த எல்லா தமிழ் திரைப்படங்களும் வெவ்வேறு வகையில் முக்கியமான ஒரு பதிவை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தி சென்றவை.
தொடங்கும் நாள்: 30-11-2013, சனிக்கிழமை.
இடம்: தியேட்டர் லேப், முனுசாமி சாலை, புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில், மேற்கு கே.கே. நகர், சென்னை.
தினசரி நேரம்: மாலை 6 மணிக்கு.
31. வானம்பாடி - ஜி.ஆர். நாதன்
ஷீஷ்பரிஷ் என்கிற வங்கக் கதையை தழுவி எடுக்கப்பட்டது. இந்த படத்தில் ஜி.ஆர். நாதனின் ஒளிப்பதிவு மிக முக்கியமானது. வெளிநாட்டுத் திரைப்படங்களைத்தான் நாம் பெரும்பாலும் ஒளிப்பதிவிற்காக உதாரணம் காட்டி பேசுவோம். இந்த படத்தை ஒருமுறைப் பாருங்கள். அசந்துப் போவீர்கள். இந்த படத்தின் இயக்கமும் ஜி.ஆர். நாதன்தான். கங்கைக் கரைத் தோட்டம், ஏட்டில் எழுதி வைத்தேன் போன்ற காலத்தால் அழியாத பாடல்களை கொண்ட படம்.
32. அந்த நாள் - எஸ். பாலச்சந்தர்
பாடல்களை மட்டுமே பிரதானமாக கொண்டு வெளிவந்த தமிழ் படங்களுக்கு மத்தியில், பாடல்களே இல்லாமல் வெளிவந்து, திரைக்கதை அமைப்பில் புதிய உத்தியை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியப் படம். ரஷோமானின் தழுவல் என்கிற சர்ச்சைக்குள் நிகழ்காலத்தில் சிக்கினாலும், தமிழில் தவிர்க்க முடியாத திரைப்படம் இது.
33.
உத்தமபுத்திரன் - டி.ஆர். சுந்தரம்