Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேவ் தீபாவளி என்பது என்ன...? அது எப்போது கொண்டாடப்படுகிறது...?

தேவ் தீபாவளி என்பது என்ன...? அது எப்போது கொண்டாடப்படுகிறது...?
வாரணாசியில் ஆண்டுதோறும் தேவ் தீபாவளி பண்டிகை கங்கை நதியையும், காசி விஸ்வநாதரையும் மரியாதை செலுத்தும் விதமாக மிகவும் கோலாகலமாக  கொண்டாடப்படுகிறது.

இங்கு கொண்டாடப்படும் மஹா உத்சவம் என்ற பண்டிகையின் கடைசி நாளான தேவ் தீபாவளியின் போது நகரமெங்கும் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அதோடு கங்கை ஆற்றில் ஆயிரமாயிரம் அகல் விளக்குகள் மிதக்கவிடப்படும். அப்போது மாலைவேளையில் நடக்கும் கங்கா ஆர்த்தியும்  நடக்கும்.
 
தீபாவளி பண்டிகையை அடுத்து கார்த்திகை மாதத்தின் பௌர்ணமி தினத்தன்று தேவ் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தின் போது வானிலிருந்து கடவுளர்கள் எல்லாம் பூமிக்கு இறங்கி வந்து கங்கையில் நீராடுவதாக புராண நம்பிக்கை சொல்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக உலகம் முழுவதுமிருந்து ஏராளமான பக்தர்களும், பயணிகளும் வாரணாசியில் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் குழுமுகிறார்கள்.
 
கங்கை நதியின் படித்துறைகள் அனைத்தும் தேவ் தீபாவளி பண்டிகையின்போது வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அப்படி 84 படித்துறைகளும் வண்ண விளக்குகளால் மிளிரும் போது படகுப்பயணம் மேற்கொள்வது சுற்றுலாப் பயனிகளைடையே மிகவும் பிரபலமாக இருக்கிறது. இந்த அலங்கார விளக்குகளின்  அணிவகுப்பு கங்கை நதிக்கு செய்யும் மரியாதையாக கருதப்படுகிறது. அதோடு பூமிக்கு வரும் தேவதைகள் இதன் மூலம் மகிழ்ச்சி அடைவதாகவும் ஒரு நம்பிக்கை  நிலவுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (13-11-2020)!