Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரம்ம முகூர்த்தம் நேரத்தின் சிறப்புகள் என்ன...?

Advertiesment
Brahma Muhurtam
, புதன், 27 ஏப்ரல் 2022 (10:15 IST)
பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 4.30 மணி முதல் 6 மணி வரையாகும்.பிரம்மனுடைய பத்தினி சரஸ்வதி தேவி விழித்துச் செயற்படும் நேரம் பிரம்மமுகூர்த்தம் என்பதும் நம்பிக்கை. இதனால் இந்நேரம் சரஸ்வதி யாமம் எனவும் அழைக்கப்படுகின்றது.


மனதின் பிரச்னைகளை அகற்றவும் இறைவனின் அன்பில் மனதை நிலை நிறுத்தவும், இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரு அற்புதமான நேரம் பிரம்ம பிரம்ம முகூர்த்தம். இந்த பிரம்ம முஹூர்த்தம் என்பது பிரம்மா சிவபெருமானை நினைத்து அற்புத வரங்களை பெற்றதால் பிரம்ம முஹூர்த்தம் என்ற சொல் வழக்கில் வந்தது.

படைப்பு கடவுளான பிரம்மா நீண்டகாலமாக உறங்கிவிட்டதால் அவரை உறக்கத்திலிருந்து எழுப்பிய சிவபெருமான்.. இந்த கலியுகத்தை அதாவது பிரம்மாவின் இரவை பிரம்மாவின் பகல் ஆக்கவேண்டும் அதாவது சத்யுகம் என்ற உலகத்தை இந்த பூமியில் ஏற்படுத்தவேண்டும் என்று பிரம்மாவிற்கு கட்டளை இட்டார். அதன் படி தன்னுடைய நிலையில் உறங்கி கொண்டிருந்த பிரம்மாவும் விழிப்படைந்து இறைவன் சிவபெருமானை பிரார்த்திக்க அவரிடம் வரங்களை பெற எந்த நேரம் உகந்தது என்று கூறினார்.

சிவபெருமானும் பூமியின் கணக்குப் படி அதிகாலை நேரம் என்னை நினைக்க என்னிடமிருந்து அளவிடமுடியாத சக்தியை பெற நினைத்த காரியத்தை சாதித்துக்கொள்ள அதிகாலை நேரத்தையும், சந்தியா காலம் எனும் சாயங்கால வேலையையும் பயன் படுத்திக்கொள்ள கட்டளையிட்டார்.

பிரம்மாவும் அதன்படி பூமியின் கணக்குப்படி நாள் முழுவதும் இறைவனுடைய நினைவில் இருந்தாலும் அதிகாலை என்ற பிரம்ம பிரம்ம முகூர்த்தத்தையும் சந்தியா காலத்தையும் மிக சிறப்பான பயிற்சிக்காக சிவபெருமான் கட்டளைப்படி பயன்படுத்தினார். பிரம்மாவே இந்த அதிகாலை நேரத்தில் சிறப்பு பயிற்சி செய்ததால் அவரின் பெயராலேயே பூமியின் கணக்குப்படி அதிகாலை 4-5 வரை பிரம்ம முகூர்த்தம் என்றே அழைக்கப்படுகின்றது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (27-04-2022)!