Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏழரை சனியின் தாக்கம் குறைய செய்யவேண்டிய பரிகாரங்கள் !!

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (16:41 IST)
ஏழரைச் சனி நடக்கும் போது பல்வேறு பிரச்சனைகள் நடக்கும். சில பரிகாரங்களை தொடர்ந்து செய்து வந்தால் சனியின் தாக்கம் குறையும்.

ஏழரைச்சனி என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் குறைந்தது மூன்று முறை வரக்கூடிய ஒரு நிகழ்வு. சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் வாசம் செய்வார். நமது ராசிக்கு முந்தைய ராசியில் சனி வந்து அமரும்போது ஏழரைச் சனி பிடிக்கிறது என்று சொல்கிறோம்.
 
முந்தைய ராசியில் இரண்டரை வருடம், நமது ஜென்ம ராசியில் இரண்டரை வருடம், நமது ராசிக்கு அடுத்த ராசியில் இரண்டரை வருடம் என ஆக மொத்தம் ஏழரை வருடம் சனியின் தாக்கத்தினைப் பெறுவதை ஏழரைச் சனி என்கிறோம்.
 
22 வருடங்களுக்கு ஒரு முறை ஏழரைச் சனி என்பது நமது வாழ்வில் இடம் பிடிக்கிறது. இந்தக் காலத்தில் சிறு சிறு தடங்கல்களை சந்திக்க நேரிடுமே தவிர பெரிய அளவிலான பாதகங்கள் ஏதும் ஏற்படாது.
 
அவரவர் ஜாதக ரீதியாக நடைபெறும் தசாபுக்தியே பலன்களை நிர்ணயம் செய்யும். சனி பகவான் தனது கடமையைச் செய்வதில் மிகவும் கண்டிப்பானவர் என்பதால் அவரால் உண்டாகும் சோதனைகளை அனுபவித்தே ஆக வேண்டும்.
 
ஏழரைச் சனியின் தாக்கத்தினைப் பெறுபவர்கள் சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து காகத்திற்கு தயிர் கலந்த சாதத்தில் எள்ளு சிறிதளவு கலந்து வைப்பது நல்லது.
 
சனிக்கிழமையில் வீடு வாசல் தேடி வரும் பிச்சைக்காரர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் உங்களால் இயன்ற உணவினை தர்மம் செய்யுங்கள்.
 
ஆதரவற்ற முதியவர்கள், அநாதைச் சிறுவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு முடிந்த உதவியைச் செய்வதும் சனி பகவானுக்குச் செய்யும் பரிகாரமே ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments