Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புரட்டாசி மாத ராசி பலன்கள் 2023 – கன்னி

Advertiesment
புரட்டாசி மாத ராசி பலன்கள் 2023 – கன்னி
, சனி, 16 செப்டம்பர் 2023 (15:06 IST)
புரட்டாசி மாத ராசி பலன்கள் 2023 – கன்னி

கிரகநிலை:
ராசியில் செவ்வாய்; சூர்யன்- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது, சந்திரன்  - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஸ்தானத்தில் குரு (வ), ராகு - லாப ஸ்தானத்தில் சுக்ரன்  - அயன சயன போக ஸ்தானத்தில் புதன் என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றங்கள்:
27-09-2023 அன்று புதன் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
30-09-2023 அன்று சுக்ர பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
04-10-2023 அன்று செவ்வாய் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
08-10-2023 அன்று ராகு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
08-10-2023 அன்று கேது பகவான் தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
15-10-2023 அன்று புதன் பகவான் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
நம்மால் எதையும் செய்ய முடியும் என்ற எண்ணம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனதிருப்தியடைவீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனகுழப்பம் நீங்கும். பணவரத்தை அதிகப்படுத்தும்.

தொழிலதிபர்கள் அதிக பொருளாதார வரவுகளை பெறுவார்கள். உத்தியோகஸ்தர்கள் அரசு தனியார் துறைகளில் உள்ளவர்களும் இது வரை இருந்த ஆடம்பர செலவினங்களை தவிர்த்து தங்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சிக்காக சுபமங்களச் செலவுகளை செய்யும் வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் கணவன் மனைவி குடும்ப ஒற்றுமையில் சீரான நிலையே காணப்படும்.

ஆயுள் அபிவிருத்தி  பெறுவதற்கான வகையில் உங்கள் நற்செயல்கள் இருக்கும். தந்தை வழி சார்ந்த உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்தை  கண்டு தங்களுக்கு தேவையான உதவிகளை உங்களிடம் கேட்டு பெற வருவார்கள். பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசியல்துறையினருக்கு பணதேவை உண்டாகலாம். மாணவர்களுக்கு கல்வியில் வேகம் காணப்படும். சக மாணவர்களிடம் சுமுகமாக அனுசரித்து போவது நல்லது.

உத்திரம் - 2, 3, 4:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது.  கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போவது நன்மைதரும். வீண் பேச்சை குறைப்பது நல்லது.

ஹஸ்தம்:
இந்த மாதம் எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். வீண் எதிர்ப்புகள் விலகும்.  பணவரத்து திருப்தி தருவதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும்.

சித்திரை - 1, 2:
இந்த மாதம் வாகனங்களை  ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம்.  தனிமையாக இருக்க நினைப்பீர்கள்.

பரிகாரம்: முடிந்த வரை அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வலம் வரவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன்,சனி
சந்திராஷ்டம தினங்கள்: அக் 1, 2
அதிர்ஷ்ட தினங்கள்: செப் 25, 26

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புரட்டாசி மாத ராசி பலன்கள் 2023 – சிம்மம்