Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பில்லி, சூன்யம் தீய விளைவுகளில் இருந்து காக்கும் ஆகாச கருடன் கிழங்கு

பில்லி, சூன்யம் தீய விளைவுகளில் இருந்து காக்கும் ஆகாச கருடன் கிழங்கு
ஆகாச கருடன் என்ற இந்த கிழங்கை கயிற்றில் கட்டி தொங்க விட்டால் ஆகாயத்தில் பறக்கும் கருடனைப் போலவே தோற்றம் அளிக்கும். மேலும் காற்றில் உள்ள ஈரத்தை ஈர்த்து வாங்கி உயிர் வாழும் சக்தி கொண்டது. முளைவிட்டு கொடியாக படர்ந்து விடும்.
இதற்கு சாகா மூலி என்ற பெயரும் உண்டு. இந்த கிழங்கில் சில அமானுஷ்ய சக்திகள் உண்டு. அதாவது வீட்டிற்கு ஏற்படும் திருஷ்டி, தோஷங்களை போக்கும் தன்மை கொண்டது. மேலும் எதிரிகளால் ஏவப்படும் பில்லி, சூன்யம் போன்ற மாந்திரீக எதிர் வினைகளை ஈர்த்து தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் தன்மை  கொண்டது. இதனால் வீட்டில் உள்ளவர்கள் மாந்திரீக தீய விளைவுகளில் இருந்து காக்கப் படுவர்.
 
பயன்கள்: இதற்கு விஷத்தை முறிக்கும் ஆற்றல் கொண்டது. அத்துடன் இளைத்த உடலைத் தேற்றவும், உடலை உரமாக்கி சூட்டை தணிக்கும் குணம் கொண்டது. ஆனால் சித்த மருத்துவரின் ஆலோசனையின்படி சாப்பிடுதல் வேண்டும்.
webdunia
பாம்பு விஷங்கள், தேள், பூரான் போன்ற விஷங்கள் எளிதில் முறியும். பாம்பு கடித்தவருக்கு இந்த ஆகாச கருடன் கிழங்கை ஒரு எலுமிச்சை அளவு சாப்பிட்டால் வாந்தியும், மலம் கழியும். உடனே விஷமும் முறிந்துவிடும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒவ்வொரு ராசிகளுக்கும் அதிஷ்டத்தை தரக்கூடிய நவரத்தின கற்கள்...!