Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அக்டோபர் மாத ராசிப் பலன்கள் - விருச்சிகம்

Advertiesment
அக்டோபர் மாத ராசிப் பலன்கள் - விருச்சிகம்
, வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (20:28 IST)
தன்மானம் அதிகமுள்ளவர்களே! 16-ஆம் தேதி வரை உங்கள் பிரபல யோகாதிபதியான சூரியன் லாப வீட்டில் நிற்பதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். அரசால் ஆதாயம் உண்டு. ஷேர் மூலம் பணம் வரும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும்.
 
சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் திடீர் பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். பூர்வீக சொத்து கைக்கு வரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை ஒருவழியாக  தந்து முடிப்பீர்கள்.
 
மனைவி உங்களின் புது முயற்சிகளுக்கு பக்கபலமாக இருப்பார். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதைக் கூடும். கல்யாணப் பேச்சு வார்த்தை நல்ல விதத்தில் முடியும். சமையலறையை நவீனமாக்குவீர்கள். ஜென்மச் சனி தொடர்வதால் தூக்கமில்லாமல் போகும். அவ்வப்போது புலம்புவீர்கள். நெஞ்சு வலி, வயிற்று எரிச்சல், காய்ச்சல், அலர்ஜி வந்துப் போகும். சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும்.
 
ஆனால் குருபகவான் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் வசதி, வாய்ப்புகள் பெருகும். எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்புக் கிடைக்கும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். கோவில் கும்பாபிஷேகத்திற்கு தலைமை தாங்குவீர்கள். சிலர் வெளிநாடு சென்று வருவீர்கள். 24-ஆம் தேதி வரை ராசிநாதன் செவ்வாய் 2-ல் அமர்ந்திருப்பதால் சகோதர வகையில் அலைச்சல், செலவு, டென்ஷன் வந்துப் போகும். பேச்சில் நிதானம் அவசியம். வெளிவட்டாரத்தில் அவசரப்பட்டு யாரையும் விமர்சிக்க வேண்டாம்.
 
கன்னிப் பெண்களே! காதல் குழப்பங்கள் தீரும். புதிய நண்பர்களின் நட்பால் மகிழ்ச்சியடைவீர்கள். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். பங்குதாரர்களுடன் இருந்த குழப்பங்கள் நீங்கும். வேலையாட்கள் கொஞ்சம் முரண்டு பிடிப்பார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரி நெருக்கமாவார். இடம் மாற்றம் சாதகமாக அமையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். கலைத்துறையினரே! உங்கள் படைப்புகள் பலராலும் பாராட்டிப் பேசப்படும். புது அணுகுமுறையால் வலம் வரும் மாதமிது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அக்டோபர் மாத ராசிப் பலன்கள் - துலாம்