Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அக்டோபர் மாத ராசிப் பலன்கள் - மீனம்

Advertiesment
அக்டோபர் மாத ராசிப் பலன்கள் - மீனம்
, வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (20:38 IST)
செய்நன்றி மறவாதவர்களே! சுக்ரனும், ராசிநாதன் குருபகவானும் சாதகமாக இருப்பதால் உங்கள் செயலில் வேகம் கூடும். உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

பணவரவு அதிகரிக்கும். பிரபலங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள். பழைய சிக்கல்களுக்கு மாறுபட்ட அணுகுமுறை மூலம் புதிய தீர்வு கிடைக்கும். வெளிநாட்டில், வெளிமாநிலத்தில் இருப்பவர்களால் பண உதவிகள் கிடைக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள்.
 
வீடு மாற வேண்டி வரும். வசிக்கும் வீட்டில் கூடுதல் அறை சிலர் கட்டுவீர்கள். மனைவிக்கு வேலைக் கிடைக்கும். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். செவ்வாய் சாதகமாக இருப்பதால் புது வேலைக் கிடைக்கும். பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கடனாகவும், கைமாற்றாகவும் வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். வழக்கிலும் வெற்றி கிடைக்கும். ரசனைக் கேற்ற வீடு, மனையும் அமையும்.
 
பாகப்பிரிவினை, சொத்துப் பிரச்னைகள் தீரும். உடன்பிறந்தவர்கள் உங்களை சரியாகப் புரிந்துக் கொள்வார்கள். இந்த மாதம் முழுக்க சூரியன் சாதகமாக இல்லாததால் உடல் உஷ்ணத்தால் வேனல் கட்டி, தொண்டைப் புகைச்சல் வந்துப் போகும். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, அடிவயிற்றில் வலி வந்து நீங்கும். அரசுக்கு செலுத்த வேண்டிய வாகளில் தாமதம் வேண்டாம். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வந்துப் பேசுவார்கள்.
 
கன்னிப் பெண்களே! காதல் கனியும். கல்யாணம் கூடி வரும். ராகு 6-ல் நிற்பதால் வியாபாரம் செழிக்கும். முக்கிய பிரமுகர்கள் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். உங்கள் ரசனைக் கேற்ப கடையை விரிவுப்படுத்தி, அழகுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சங்கத்தில் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கலைத்துறையினரே! பொது நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள். வர வேண்டிய சம்பள பாக்கி கைக்கு வரும். செல்லும் இடமெல்லாம் சிறப்பு பெறும் மாதமிது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அக்டோபர் மாத ராசிப் பலன்கள் - கும்பம்