Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அக்டோபர் மாத ராசிப் பலன்கள் - மகரம்

Advertiesment
அக்டோபர் மாத ராசிப் பலன்கள் - மகரம்
, வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (20:34 IST)
கடந்த காலத்தை எளிதில் மறக்காதவர்களே! ராஜகிரகங்களான குருவும், சனியும் வலுவாக இருப்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் அமைதி திரும்பும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள்.
 
கோவில் விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். பாகப்பிரிவினை நல்ல விதத்தில் முடிவடையும். பங்குச் சந்தை மூலமாக பணம் வரும். வேற்றுமதத்தவர்கள், வெளிநாட்டிலிருப்பவர்களால் அதிரடி மாற்றம் உண்டாகும். புது பதவிகள் தேடி வரும். சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் பிள்ளைகளின் தனித்திறமைகளைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துவீர்கள்.
 
மகனுக்கு அயல்நாட்டில் வேலைக் கிடைக்கும். உயர்கல்விக்காகவும் அனுப்பி வைப்பீர்கள். வீடு கட்டும் பணி விரைவடையும். வாகனம் புதிதாக வாங்குவீர்கள். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். 24-ஆம் தேதி வரை செவ்வாய் 12-ம் இடத்தில் மறைந்திருப்பதால் திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். சகோதரங்களுடன் விவாதங்கள் வரும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்துப் போகும்.
 
16-ஆம் தேதி வரை 9-ம் வீட்டில் சூரியன் நிற்பதால் தந்தையாருக்கு மூச்சுத் திணறல், மூட்டு வலி வந்துப் போகும். அரசாங்க விஷயம் தள்ளிப் போய் முடியும். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். சர்ப்ப கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இல்லாததால் உங்களைப் பற்றிய வதந்திகள் ஆங்காங்கே பரவும். பலவற்றையும் நினைத்து குழம்பாதீர்கள். முன்கோபத்துடன் பேசி சொற் குற்றம், பொருட் குற்றத்தில் சிக்கிக் கொள்ளதீர்கள்.
 
கன்னிப் பெண்களே! பெற்றோருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த தோழியை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். சந்தை ரகசியங்களை தெரிந்துக் கொள்வீர்கள். புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். மூத்த அதிகாரிகள் பக்கபலமாக இருப்பார்கள். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். கலைத்துறையினரே! புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். புதிய பாதையை நோக்கி பயணித்து வெற்றி பெறும் மாதமிது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அக்டோபர் மாத ராசிப் பலன்கள் - தனுசு