Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாகலிங்க பூவின் சிறப்புக்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!

Webdunia
வியாழன், 5 மே 2022 (17:58 IST)
தினசரி நாகலிங்க மர தரிசனமே நம் உள்ளுள் காலசக்தியையும், கால உணர்வையும் இயங்க வைப்பதாகும். நாகலிங்க புஷ்பத்தை ஆலயபூஜைக்கு அளித்தல் மிகப்பெரிய புண்ணிய காரியம் ஆகும்.


பல பிரதோஷ வழிபாட்டுப் பலன்களை ஒருங்கே தர வல்லதே இறைவனுக்கு நாகலிங்க பூவால் ஆற்றும் பூசனை. நாகலிங்கப் பூவை வைத்து பூஜிப்பதின் முழுபலன்களையும் அடைய, பூஜிக்கப்படும் ஒவ்வொரு பூவிற்கும் ஒருவருக்கேனும் அன்னதானம் அளிக்க வேண்டும்.

நாகலிங்க மரம் இயற்கையான யோக அக்னியைப் பூண்டது ,நாகலிங்கப் பூவை மரத்தில் இருந்து பறிக்கும்போது கைக்கு இதமான , உஷ்ணமாய் இருப்பதை  உணர்ந்திடலாம்.

ஒவ்வொரு நாகலிங்கப் பூவும் உள்சூட்டுடன் இருக்கும் இதுவே யோகபுஷ்ப தவச்சூடு ஆகும் .இதன் ஸ்பரிசம் மனித மூளைக்கு மிகவும் நல்லது.

ஒவ்வொரு நாகலிங்க பூவும் சூரிய ,சந்திர கிரணங்களின் யோக சக்தியை கொண்டு மட்டுமே மலர்கின்றது என்ற அறிய விடயத்தை நாகசாலிச் சித்தரும், நாகமாதா சித்தரும் பூவுலகிற்கு மீண்டும் உணர்த்தினார்கள். இவ்வாறு கண்ணுக்குத் தெரிந்த நாகலிங்க பூவின் மகிமையை இனிமேலாவது உணர்ந்து நாகலிங்க  பூவைக்கொண்டு இறைவனை வணங்குவோம்.

கடன் நீக்கி வல்லமை தரும் இந்த மரத்தின் இலைகளை அரைத்துத் தோல் நோய்களுக்கு மருந்தாகவும் இலைகளை மென்று தின்பதால் பல்வலிக்கு மருந்தாகவும் பட்டைகளையும் காய்களையும் பக்குவப்படுத்தி விஷ ஜுரத்துக்கு மருந்தாகவும் பயன்படுத்தலாம் என்கிறது சித்த மருத்துவம்.

நமது நோய் தீரும் வரை தினமும் வேண்டிக்கொண்டு சிவமந்திரங்கள் அல்லது தேவாரப் பாடல்கள் பாடி வழிபட வேண்டும். நமது வேண்டுதல்கள் நிறை வேறிய பிறகு, நாகலிங்கப் பூவை ஓடும் நதி அல்லது கடலில் போடலாம். அதுவரை அது எவ்வளவு காய்ந்து போனாலும், அதற்கு நமது வேண்டுதலை நிறைவேற்றும் சக்தி உண்டு.

தொடர்புடைய செய்திகள்

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments