Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அட்சய திருதியை நாளில் எந்த நேரத்தில் புதிய பொருட்களை வாங்கலாம்...?

Gold
, செவ்வாய், 3 மே 2022 (12:13 IST)
அட்சய திருதியை நாளில் குறிப்பிட்ட முகூர்த்த நேரத்தில் பொருட்கள் வாங்கினால் மட்டுமே அது அட்சயமாக பெருகும். இன்று சூரியனும், சந்திரனும் உச்ச ராசியில் இருப்பார்கள். சூரியன் மேஷ ராசியிலும், சந்திரன் ரிஷப ராசியிலும் இருப்பார்கள். இந்த அமைப்பு புதிய பொருட்கள் வாங்குபவர்களை ஆசீர்வதிப்பதாக இருக்கும்.


செவ்வாய்க்கிழமை பொன்னும், பொருளும் வந்தால் அளவற்ற மகிழ்ச்சி கிடைக்கும். எனவே இன்று அட்சய திருதியை தினத்தை மக்கள் அதிர்ஷ்டகரமான நாளாக கருதுகிறார்கள். என்றாலும் புதிய பொருட்கள் வாங்கும் போது, ‘சுக்கிரை ஹோரை’ நேரத்தில் வாங்க வேண்டும் என்பார்கள். அந்த அடிப்படையில் பார்த்தால் இன்று காலை 8 மணி முதல் 9 மணி வரையும் பிறகு பிற்பகல் 3 மணி முதல் மாலை 4 மணி வரையும் சுக்கிரன் காலமாகும்.

அட்சயத் திரிதியை தினத்தன்று ரோகிணி நட்சத்திரம் சேர்ந்து வந்தால், அதை மிக, மிக சிறப்பான நாளாக நம் முன்னோர்கள் வரையறுத்துள்ளனர். அதாவது பொதுவாக அட்சய திருதியை நாளில் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பார்கள். அதே சமயம் ரோகிணி நட்சத்திர நாளில் அட்சய திருதியை தினம் வந்தால், அது நமக்கு பல மடங்கு பலன்களை தருமாம்.

இன்று அட்சய திருதியை தினம் அந்த சிறப்பான தினமாக வருகிறது. இன்று அதிகாலை 12.24 மணி வரை கார்த்திகை நட்சத்திரம் உள்ளது. அதன் பிறகு ரோகிணி நட்சத்திரம் வந்து விடுகிறது. எனவே இன்று மதியம் 3 மணிக்கு மேல் புதிய பொருட்கள் வாங்கலாம். 3 மணி முதல் 4.30 மணி வரை ராகு காலம் என்பதால் 4.30 மணிக்கு பிறகு பொருட்கள் வாங்கலாம்.

இன்று பஞ்சாங்கப்படி அமிர்தயோகம் உள்ளது. எனவே ரோகிணி நட்சத்திரத்தில் அமிர்தயோகத்தில் இன்று 4.30 மணி முதல் 6 மணி வரை புதிய பொருட்கள் வாங்குவது மிக, மிக உகந்தது மேலும்10.30 மணி முதல் 12 மணி வரையிலான நேரத்தில் புதிய பொருட்கள் வாங்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரமலான் பண்டிகையின் கொண்டாட்டங்களும் சிறப்புக்களும் !!