Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விளக்கின் வகைகளும் அதன் சிறப்புகளும்...!

விளக்கின் வகைகளும் அதன் சிறப்புகளும்...!
காமாட்சி விளக்கு: விளக்குகளில் காமாட்சி விளக்கு புனிதமானது. இது எல்லா வீடுகளிலும் இருக்க வேண்டிய விளக்கு. பூஜைக்கு முன் பூவும், பொட்டும் வைத்து  மங்கலத்துடன் தீபம் ஏற்றி, தினமும் வழிபடத்தக்கது. பல குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாக காமாட்சியம்மன் விளக்குகளை பொன் போலப் போற்றிப்  பாதுகாத்து வைத்துள்ளனர்.
குத்து விளக்கு: குத்துவிளக்கும், காமாட்சியம்மன் விளக்கை போலப் புனிதமானது. செங்குத்தாக நிமிர்ந்து நேராக நிற்கும் விளக்கு என்பதால் குத்துவிளக்கு என்ற பெயர் ஏற்பட்டது. இந்த விளக்கு பூஜையில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஐந்துமுகக் குத்துவிளக்குகள் இரண்டு பூஜை அறையில் சுடர் விட்டு  பிரகாசிக்குமானால் அங்கே மங்கலம் பொங்கும் என்பது ஐதீகம்.
 
பாவை விளக்கு: ஒரு பெண் அகல் விளக்கை ஏந்திக் கொண்டிருப்பது போல் இருப்பது பாவை விளக்கு எனப்படுகிறது. இந்த வகை விளக்குகளை கடவுளின் முன் ஒளிதரும் விளக்காக பயன்படுத்தலாம்.
 
தீபங்கள் பதினாறு: தூபம், தீபம், புஷ்பதீபம், நாத தீபம், புருஷா மிருகதீபம், கஜதீபம், ருயாஜத தீபம், வியாக்ர தீபம், ஹம்ஸ தீபம், கும்ப தீபம், குக்குட தீபம், விருக்ஷ தீபம், கூர்ம தீபம், நட்சத்திர தீபம், மேருதீபம், கற்பூர தீபம் என தீபங்கள் 16 வகைப்படும்.
 
தூக்கு விளக்குகள் எட்டு: வாடா விளக்கு, தூக்கு விளக்கு, தூண்டாமணி விளக்கு, நந்தா விளக்கு, கூண்டு விளக்கு, புறா விளக்கு, சங்கிலித் தூக்கு விளக்கு,  கிளித்தூக்கு விளக்கு.
 
பூஜை விளக்குகள் ஒன்பது: சர்வராட்சத தீபம், சபூத தீபம், பிசாஜ தீபம், கின்னர தீபம், கிம்புரு தீபம், கணநாயக தீபம், வித்யாதர தீபம், கந்தர்வ தீபம், பிராக தீபம்  ஆகியவை 9 வகை பூஜை விளக்குகளாக வழக்கத்தில் உள்ளன. 
 
சரவிளக்கு, நிலை விளக்கு, கிளித்தட்டு விளக்கு ஆகியன கோவில் விளக்குகளின் மூன்று வகைகளாகும். 
 
கைவிளக்குகள் ஐந்து கஜலட்சுமி விளக்கு, திருமால் விளக்கு, தாமரை விளக்கு, சிலுவை விளக்கு, கணபதி விளக்கு ஆகியவை கை விளக்குகளாகும். 
 
நால்வகை திக்பாலர் தீபங்கள் ஈசான தீபம், இந்திர தீபம், வருண தீபம், யம தீபம். 
 
அஷ்டகஜ தீபங்கள் எட்டு: ஐராவத தீபம், புண்டரீக தீபம், குமுத தீபம், ஜனதீபம், புஷ்பகந்த தீபம், சார்வ பவும தீபம், சுப்ரதீபம், பித்ர தீபம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீபம் ஏற்றும் திரிகளை பொறுத்து ஏற்படும் பலன்கள்...!