Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குண்டலினி தோன்றி உயர்ந்திட; வராஹி வழிபாடு!

Advertiesment
குண்டலினி தோன்றி உயர்ந்திட; வராஹி வழிபாடு!
எப்போதும் முடங்கி கிடக்கும் மூலாதாரத்தில் இருந்து குண்டலினி எழுந்து ஆக்கினையை அடையும். அப்படியான ஒரு உந்துதலை தருபவள் வராஹி.
குண்டலினி என்பது நமக்குள் பதைந்திருக்கும் நிலை ஆற்றல் என்றும், அது பாம்பைப் போல மூன்றரை சுருளாக சுருண்டு நமது மூலாதாரத்தில் புதைந்திருக்கிறது.
 
வராஹி கையில் வைத்துள்ள ஆயுதங்களில் முதன்மையானவை கலப்பை மற்றும் தண்டம். கலப்பையின் வேலை என்ன மண்ணின் அடியில் (ஆழத்தில்) இருப்பதை எடுப்பதற்கு தானே. கிழங்கு முதலானவை எடுக்க, நிலத்தை சீர் செய்ய, அது போல் நாம் பாவம் செய்ய செய்ய அவை பதிவுகளாகி (இப்பிறவி என்று  இல்லை கர்ம பயன்களும் - வினைப்பயன் என கர்ம மணல் பரப்பின் உள்ளே ஆழத்தில் உள்ள கிழங்கான குண்டலினியை தோன்றி உயர்த்தவே கலப்பை ஏந்திய  கையினாளாய் விளங்குகிறாள் அன்னை.
 
எழுந்த குண்டலினி மேல்வரவேண்டுமே அதற்குதான் அதை தட்டி உயர்த்த கோல் (தண்டம்) ஏந்தியவள் அன்னை. அன்னை லலிதையின் பிருஷ்ட (பின்) பாகத்தில் இருந்து தோன்றியவளாம். ஆம் மூலாதாரம் இருக்கும் இடம், ஆக சரி தானே அன்னையின் வடிவமும், அமைப்பும் ஆயுதங்களும்.
 
வராஹி வழிபட்டால் வாக்கு பலிதம் நிகழும். எதிரிகள் குறைந்து நண்பர்களாகி விடுவர். மேலும் குண்டலினி உயர்ந்தால் உங்களை யாராலும் வசியம் பண்ண முடியாது. துர்தேவதைகள் அண்ட முடியாது. வராஹி வழிபாட்டுக்கு முக்கியம் உள்ள தூய்மையும் சுத்தமும், சிறிதளவும் காமத்தின் பால் உள்ளம்  செல்லுதலாகாது. வாரஹி தேவ குணமும் மிருக பலமும் கொண்டவள். இதனால் தான் உக்கிர தெய்வம் என்று சொல்லுவார்கள். தவறுக்கான தண்டனையும்  பெரிதாக இருக்கும்.
 
வராஹி காயத்திரி:
 
ஓம் ஸ்யாமளாயே வித்மஹே
ஹல ஹஸ்தாய தீமஹி
தன்னோ வராஹி ப்ரசோதயாத்
 
என்னும் மந்திரத்தை கஷ்டம் வரும் போது என்று தான் இல்லை, எப்போதும் ஜெபியுங்கள். அன்னை சடுதியில் மாற்றம் தருவாள். அவளை மனதார  நினைத்தாலே அவளை அடையும் உபாயம் காட்டிடுவாள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாஸ்து: தியானம் செய்ய சிறந்த இடம்