Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜனவரி 2025 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – மிதுனம்! | January 2025 Monthly Horoscope Midhunam

Mithunam

Prasanth Karthick

, சனி, 28 டிசம்பர் 2024 (12:52 IST)
January 2025 Monthly Horoscope : இந்த 2025ம் ஆண்டின் இறுதி மாதமான ஜனவரி மாதம் பல்வேறு வழிகளில் நன்மைகளை தரும் மாதமாக அமைகிறது. இந்த ஆண்டின் இறுதி மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.
 

மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய்(வ) -  சுக  ஸ்தானத்தில் கேது -  ரண ருண ரோக  ஸ்தானத்தில் புதன் -  களத்திர  ஸ்தானத்தில் சூர்யன் -  அஷ்டம  ஸ்தானத்தில் சுக்ரன் -  பாக்கிய ஸ்தானத்தில் சனி -  தொழில்  ஸ்தானத்தில் ராஹூ  - அயன சயன போக  ஸ்தானத்தில் குரு (வ) என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்: 

01.01.2025  அன்று  புதன்  ரண  ருண  ரோக  ஸ்தானத்தில்  இருந்து  களத்திர  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
 14.01.2025   அன்று  களத்திர  ஸ்தானத்தில்  இருந்து  சூர்யன்   அஷ்டம  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
18.01.2025 அன்று தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில் இருந்து செவ்வாய் பகவான் ராசிக்கு மாறுகிறார்.
 28.01.2025 அன்று பாக்கிய ஸ்தானத்தில் இருந்து சுக்கிர பகவான் தொழில்  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் நெடுங்காலமாக மனதில் தேங்கிக் கிடந்த திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய காலகட்டதில் இருக்கிறீர்கள். தடைபட்டிருந்த சுபகாரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நடைபெறும். வீடு கட்டும் முயற்சியில் உள்ளவர்களுக்கு துரித கதியில் பணிகள் நடைபெறும். உறவுகள், நண்பர்கள் மத்தியில் இருந்த கருத்து வேற்றுமை அகலும். மனஸ்தாபங்கள் நீங்கும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். வழக்கு வியாஜ்ஜியங்களில் நிலுவைகள் தொய்வு ஏற்படலாம்.

ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். பூர்வபுண்ணிய விரையாதிபதி சுக்கிரன் தனஸ்தானத்தைப் பார்ப்பதால் பிதுரார்ஜித சொத்து விஷயங்களில் ஒரு நல்ல முடிவுகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு பார்த்துக் கொண்டிருக்கும் வேலையில் இடமாறுதல்கள் ஏற்படலாம். வியாபாரிகளுக்கு லாபம் ஈட்டும் காலமிது. கலைத்துறையினருக்கு ஓரளவு முன்னேற்றம் கிடைக்கும். பெண்களுக்கு வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். அரசியலில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் குவியும். மாணவமணிகளுக்கு புதியதாக கல்வி பயில மனம் ஆனந்தப்படும். நல்ல நட்பு வட்டாரம் கிடைக்கும்.

ம்ருகசீரிஷம்:

இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும் புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம்.

திருவாதிரை:

இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சிறிய வாக்குவாதம் ஏற்படலாம். பிள்ளைகள் உங்களை புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியை தரும். 

புனர்பூசம்:

இந்த மாதம் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை  ஒப்படைப்பதில் கவனம் தேவை. மாணவர்களுக்கு  கல்வியில் இருந்த போட்டிகள்  விலகும். பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும்.

பரிகாரம்: புதன்தோறும் பெருமாளுக்கு நல்லெண்ணெய் மற்றும் நெய் கலந்து விளக்கு ஏற்றவும்.

சந்திராஷ்டம தினங்கள்:      29, 30, 2, 3
அதிர்ஷ்ட தினங்கள்:            10, 11

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜனவரி 2025 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – ரிஷபம்! | January 2025 Monthly Horoscope| Rishabam | Taurus Zodiac