Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவனை எப்படி முறையாக வழிபடுவது தெரியுமா...?

சிவனை எப்படி முறையாக வழிபடுவது தெரியுமா...?
நமது மதத்தில் எத்தனையோ கடவுள் இருந்தாலும், அவர்கள் அனைவரையும் முறையாக வழிபடுவது எப்படி என்பதை நமது சாஸ்த்திரங்கள் கூறுகின்றது. அந்த வகையில் சிவன் கோயிலிற்கு செல்லும்போது சிவனை எப்படி முறையாக வழிபடுவது எவ்வாறு என்பதை பார்ப்போம்.

பொதுவாக சிவன் ஆலயத்திற்கு சென்றவுடன் முதலில் சிவாய நாம என்று கூறி ராஜகோபுரத்தை முதலில் தரிசிக்க வேண்டும். அதன் பிறகு கோவிலின் உள்ளே  சென்ற பின் விநாயக பெருமானை வழிபட்டு தோப்புக்கரணம் போட வேண்டும்.
 
பின் நந்தி தேவரிடம் சென்று அவர் சிரத்தின் வழியாக சுவாமியை தரிசிக்க வேண்டும். அதன் பிறகு நந்தி தேவரிடம் “நந்தி தேவரே சிவபெருமானை தரிசிக்க வந்துள்ளேன், எம்பெருமானை தரிசிக்க நீங்கள் எனக்கு அனுமதி தர வேண்டுகிறேன் என்று கூறி அவரின் அனுமதியை பெறவேண்டும்.
 
நந்தி தேவரை வழிபடும் சமயத்தில் நந்தி காயத்ரி மந்திரத்தை ஜபிப்பது மிகவும் சிறந்தது. சிவனை வழிபடும் சமயத்தில் “ஓம் நம சிவாய” என்னும் மந்திரத்தை  கூறி வழிபடுவது மிகவும் நல்லது. அம்பாளை வணங்கிய பின்பு தென் முக கடவுளான தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும். தட்சிணாமூர்த்தியை வழிபடும்  சமயத்தில் தட்சிணாமூர்த்திக்குரிய மந்திரத்தை ஜபிப்பது மிகவும் சிறந்தது.
 
பிறகு கோவிலை வளம் வந்து நவகிரகங்களை வழிபடலாம். பொதுவாக சிவன் கோவிலை வளம் வருகையில் மூன்று, ஐந்து, ஏழு என்ற எண்ணிக்கையில் வலம்  வருவது நல்லது. வலம் வருகையில் “ஓம் நமசிவாய” என்று மந்திரத்தை ஜபித்தவாறே வலம் வரலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தீபத்தை ஏற்றும்போது கடைபிடிக்கவேண்டிய சில முறைகள் என்ன...?