Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரதோஷ காலத்தில் சிவாலய வழிபாட்டின் பலன்கள்..!!

பிரதோஷ காலத்தில் சிவாலய வழிபாட்டின் பலன்கள்..!!
மாதந்தோறும் இருமுறை - வளர்பிறை, தேய்பிறை திரயோதசி (13-ம் நாள்) நாட்கள் பிரதோஷ தினங்களாகும். இந்நாட்களில் மாலை 4:30 முதல்  6:00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்குப் பின், பெளர்ணமிக்கு பின் என்று இரண்டு பிரதோஷ நாட்களிலும் சிவாலயங்களில் குறித்த நேரத்தில்  சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
 
சிவனுக்குப் பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்த்தம் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அரச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெறும்.
webdunia
இறைவனுடன் கூடவே அவருடைய வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். இவருக்கு எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் போன்றவற்றை அபிஷேகத்திற்காகத் தரலாம். பின் அருகம் புல், பூ சாற்றிய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்வது வழக்கம். நந்தி  தேவரது தீபாரதனைக்குப் பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க  நம் தோஷங்கள் நீங்கி நன்மையுண்டாகும்.
 
29/7/2019 திங்கட்கிழமை சோமபிரதோஷம், 12/8/2019 திங்கட்கிழமை சோமபிரதோஷம், 28/8/2019 புதன்கிழமை பிரதோஷம், 11/9/2019 புதன்கிழமை பிரதோஷம், 26/9/2019 வியாழக்கிழமை பிரதோஷம், 11/10/2019 வெள்ளிக்கிழமை பிரதோஷம், 9/11/2019 சனிக்கிழமை சனிப்பிரதோஷம், 24/11/2019 ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம், 9/12/2019 திங்கட்கிழமை சோமபிரதோஷம், 23/12/2019 திங்கட்கிழமை சோமபிரதோஷம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (29-07-2019)!